பக்கங்கள்

ஞாயிறு, ஜனவரி 08, 2012

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வரும் மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க கடந்த 2ம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி வீசிய புயலால் மாவட்டமே முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக ஸ்தம்பித்தது.அதனையொட்டி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தனித் தேர்வர்கள் உரிய காலத்தில் பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அரசு தேர்வுத்துறை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனித் தேர்வர்கள் வரும் 12ம் தேதி வரை பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.எனவே, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தேர்வர்கள் அந்தந்த பகுதி மாவட்ட கல்வி அலுவலகம் அல்லது கடலூரில் இயங்கி வரும் அரசு தேர்வுத் துணை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதை இணைத்து வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் பெற்ற அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.dinamalar
Dinamalar