பக்கங்கள்

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

காலியிடங்கள் நிரப்பப்படும்: கல்வி அமைச்சர் சிவபதி அறிக்கை
பொதுத்தேர்வு நடைபெறும் நேரத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் விடுப்பு எடுக்கக்கூடாது என தமிழக கல்வி அமைச்சர் சிவபதி கூறியுள்ளார். சென்னையில் நடந்த மாவட்ட கல்வி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாணவர்களுக்கோ, தேர்வு எழுதும் இடங்களில் உள்ள பிரச்னைகள் இருந்தால் அதனை தீர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். கிராமப்புறங்களில் தேர்வு எழுத தேவையான பெஞ்ச் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பதவியிடம் ஒருவாரத்தில் நிரப்பப்படும். 430 பணியிடத்திற்கு தமிழக தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். 710 இளநிலை உதவியாளர் பதவியிடங்கள் தற்காலிக ஊழியர்கள் மூலம் கொண்டு நிரப்பப்படும் என கூறினார்.

1 கருத்து:

Comment about this post...