பக்கங்கள்

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்

எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரையிலான உயர்நிலைக் கல்வியை விரிவுபடுத்துவதையும் அதன் தரத்தைஉயர்த்துவதையும் ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான் திட்டம் (RSMA)நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும்சுமார் 5 கி. மீட்டருக்குள் உயர்நிலைக் கல்வியை (பத்தாம் வகுப்பு வரை)கொண்டு செல்ல உள்ளது.
மத்திய அரசின் இந்த மிக சமீபத்திய திட்டம்அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி (USE) என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுலட்சக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தொடங்கப்பட்ட சர்வ சிக்ஸா அபியான் திட்டம் பெருமளவு வெற்றி பெற்றுள்ளது.இதனால் நாடுமுழுவதும் உயர்நிலைக் கல்விக்கான கட்டமைப்பை மேம்படுத்தவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்இதனைக் கருத்தில் கொண்டு உயர்நிலைக்கல்விக்கான திட்டத்தைசெயல்படுத்தவுள்ளது. 11 ஆவது ஐந்தாண்டு திட்டகாலத்தில் ராஸ்ட்ரியமத்யாமிக் சிக்ஸா அபியான் (RMSA) திட்டம் ரூ. 20,120 கோடியில்செயல்படுத்தப்படவுள்ளது. "சர்வ சிக்ஸா அபியான் திட்டம் சிறப்பாகசெயல்படுத்தப்பட்டதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆரம்பக்கல்வியை முடித்து உயர்நிலைக்கல்வி பெற தயாராய் உள்ளனர் " என மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது..