சட்டப்பேரவையில்
நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், 2012 - 13 ஆம் நிதியாண்டுக்கான தமிழக
அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து தனது உரையை தொடங்கினார். தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: * 2011-12 நிதியாண்டில் தமிழகஅரசின் சொந்த வரி வருவாய் ரூ 59,932 கோடி * வணிக வரி வருவாய் ரூ.46,678 கோடி * வரி இல்லாத இனங்களின் மூலம் வருவாய் ரூ.6,032 கோடி * உணவு மானியத்துக் ரூ.4.900 கோடி ஒதுக்கீடு. * தமிழ்நாடு உள்கட்டமைப்புக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு. * அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு. * தேசிய கிராமபுற சுகாதார திட்டங்களுக்கு ரூ.950 கோடி ஒதுக்கீடு. * அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டு தொகை ரூ. 4 லட்சமாக உயர்வு * அரசு ஊழியர்களுக்கான சலுகைக்கு ரூ.247 கோடி ஒதுக்கீடு * ரூ.548 கோடி ரூபாய் செலவில் 3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் * அன்னதான திட்டம், மேலும் 50 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். * வீட்டு வசதி கடன் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. * மாவட்ட தொழில் மையங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 கோடி. * கடந்த 10 மாதங்களில் தமிழ்நாடு மாநிலத்தில் அமைதி நிலவியதோடு, சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக காணப்பட்டது.
ரூ.20.75 கோடி செலவில் 39 நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை, நில அபகரிப்பு தொடர்பாக
பல்வேறுமாவட்டங்களில் 30,071 புகார்கள் பெறப்பட்டு, 724.22 கோடி ரூபாய்
மதிப்புடைய நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, 25 சிறப்பு நீதிமன்றங்களும் தனியாகஅமைக்கப்பட்டுள்ளன. * சாலை பராமரிப்புக்காக ரூ.1180.95 கோடி ஒதுக்கீடு. * 1500 கீலோமீட்டர் சாலைகளை அகலப்படுத்த ரூ.740 கோடி. * ரூ.100 கோடியில் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படும். * சாலை பாதுகாப்பு நிதி ரூ.65 கோடியாக உயர்வு * நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு. * 32 மாவட்டங்களிலும் தனியார் வேலை வாய்ப்புக்கு ஓர் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படும். * 32 மாவட்டங்களுக்கு வேலை வாய்ப்பு உதவி மையம் அமைக்க ரூ.192.20 லட்சம் ஒதுக்கீடு. * தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 50% பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். * தனியார் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.1.93 கோடிஒதுக்கீடு. * மாவட்ட தொழில் மையங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 கோடி. * கிராம நிர்வாக அலுவலர்களுக்குமடி கணினி வழங்கப்படும். * தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும்.
* சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டுள்ள 'இ-சலான்' திட்டத்தின் மாபெரும்
வெற்றியானது, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி,
திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து ஆணையரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், சோதனை
முறையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்திட
வழிவகுத்துள்ளது. * உரிமையியல் நீதிமன்றங்களின் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். * 2012 - 13 நிதியாண்டில் ஒரு லட்சம் பட்டா வழங்கப்படும். * ரூ.400 கோடியில், 4,030 காவலர்களுக்கு குடியிருப்பு கட்டப்படும். * உரங்களுக்கு மதிப்புக்கூட்டு வரி விலக்கு * இரண்டாவது பசுமைப் புரட்சியை ஏற்படுத்திட நடவடிக்கை. * முன் எப்போதும் இல்லாத அளவாக, வேளாண் துறைக்கு ரூ.3,804.96 கோடி ஒதுக்கீடு. * 2011-2012 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 105 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கும். வரும் நிதியாண்டில் உணவு தானிய உற்பத்தி இலக்கினை 120 லட்சம் மெட்ரிக் டன் என இலக்கு. * தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி ஒதுக்கீடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment about this post...