பதவி உயர்வு குறித்து விளக்கம் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.
01.01.2011 பதவி உயர்வுதேர்தோர் பட்டியலில் உள்ள பதவி உயர்விற்காக
காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் 30 பேர் அரசாணை எண்.15
பள்ளிக்கல்வித்துறைநாள்.23.01.2012
எதிர்த்து தொடுத்த வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க மதுரை
உயர்நிதீமன்ற கிளை அதிரடி உத்தரவு. அடுத்தவாரம்செவ்வாய் / புதன்கிழமைக்குள்
அரசு பதிலளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வேறு 17ஆசிரியர்கள் தொடுத்த வழக்கிலும் தொடக்ககல்வி
இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து
பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியர் கூறுகையில் பதவி உயர்வு என்பது ஒரு அரசு
ஊழியரின் அடிப்படை உரிமை அதேபோல் வழக்கமாக ஒவ்வொரு வருடமும் தொடக்கக்கல்வி
துறையில் தகுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் கல்வி தகுதிற்கு
ஏற்றவாறு முதலில் பதவி உயர்வு வழங்கிவிட்டுத்தான் எஞ்சியுள்ள இடங்களுக்கு
நேரடி நியமனம் வழங்கப்படும்(அரசாணை (நிலை) எண். 239 பள்ளிக்கல்வித்துறை
நாள். 22.09.2007). ஆனால் தற்போது அதற்கு நேர்மாறான நிலை ஏற்பட்டுள்ளது
பதவி உயர்வு குறித்து தெளிவான அரசாணை இருந்தும் பதவி உயர்வு
மறுக்கப்படுவது ஒரு ஆசிரியரின் உரிமையை தட்டிப்பறிக்கும் நிலை என
தெரிவித்தார். மேலும் ஒரு ஆசிரியர் கூறுகையில் பலமுறை தொடக்கக்கல்வி
இயக்குனரிடம்இதுகுறித்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும்
மேற்கொள்ளவில்லை பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெண் ஆசிரியர்களும்
இயக்குனரிடம்முறையிட்டும் பயனில்லை என்றும் வேறு வழியில்லாமல் தான் தற்போது
உயர்நீதிமன்றத்தை நாடவேண்டிய சூழ்நிலைக்கு எங்களை ஆள்ளாக்கியுள்ளனர்
என்றும்,அதிக மனவேதனைக்கு ஆளாகியுள்ளோம் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
தற்போது தமிழக அரசின் கவனத்திற்கு சென்றுள்ளதால் விரைவில் ஒரு நல்ல முடிவு
கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.------- நன்றி கண்ணன்-Ammapet-Erode
Can i get the writ petition number. I am also one of the aggrieved teacher.
பதிலளிநீக்கு