flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் பிப்ரவரி 28-02-2012 ஞாயிறு அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ளது. அத்தேர்விற்கு தகுதியானவர்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

திங்கள், பிப்ரவரி 13, 2012

மாணவர்களை தண்டிக்கும் அதிகாரம் தேவை
வகுப்பறைகளில் அட்டூழியம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு அதிகாரம் வழங்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என, சமச்சீர் கல்விக் குழு முன்னாள் உறுப்பினர் கிறிஸ்துதாஸ் வலியுறுத்தினார்.

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

ஆசிரியர்கள், மாணவர்களைக் கண்டிப்பத்தை நிறுத்த அரசாங்கம் சட்டத்தில் சில மடத்தனமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. ஆனால், ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் எத்தகைய சட்டங்களை வகுத்துள்ளது? என்பது பெரிய கேள்வி.
இன்நேரம் இதேபோல, ஆசிரியர் ஒருவர் அடித்து மாணவன்/மாணவி மரணம் அடைந்து இருந்தால்…… இந்நேரம் தமிழகம் முழுவதும் பெற்றோர்களும்/மனித உரிமைச் சங்கங்களும் கொந்தளித்து இருக்காதா?
மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, பெற்றோரிடம் மாணவனின் நிலையை எடுத்துச் சொல்லக் கூடாது, பள்ளியின் ஆண்டு தேர்ச்சி விகிதமும் குறையக் கூடாது…… உருப்பட்டாப்லதான்.


see more
 தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மேம்பாட்டு பணிமனை பயிற்சி
திருநெல்வேலி:தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வள்ளியூர் வட்டார கிளை சார்பில் கல்வி மேம்பாட்டு பணிமனை பயிற்சி 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் நடந்த துவக்க விழாவிற்கு வட்டார தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். செயலாளர் மோதிலால் ராஜ் வரவேற்றார். இப்பயிற்சியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுடலைமணி துவக்கி வைத்து பேசினார். மாநில பொது செயலாளர் ரங்கராஜன் சிறப்புரை ஆற்றினார்.
 தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வு பெற்றோர் பிரிவு துவக்க விழா
திருநெல்வேலி:தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஓய்வு பெற்றோர் பிரிவு அமைப்பு துவக்க விழா வள்ளியூரில் நடந்தது.மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் பிராங்களின் வரவேற்றார்.மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், விருதுநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில ஓய்வு பெற்றோர் பிரிவு தென் மண்டல அமைப்பாளர் மருது, மாநில துணை செயலாளர் செய்யது இப்ராகிம் மூசா, மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கிராஜ் உட்பட பலர் பேசினர்.
புதுடில்லி: : தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை, ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கலாகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பட்ஜெட் அமையும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வருமானவரி உச்சவரம்பினை 2 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாயின. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என கூறப்பட்டது.

வியாழன், பிப்ரவரி 09, 2012

ராமநாதபுரம் :தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை உடனடியாக ஈர்த்துக் கொள்ள கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

புதுடில்லி : வருமான வரி விலக்கு வரம்பை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகிறது.

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்

எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரையிலான உயர்நிலைக் கல்வியை விரிவுபடுத்துவதையும் அதன் தரத்தைஉயர்த்துவதையும் ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான் திட்டம் (RSMA)நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும்சுமார் 5 கி. மீட்டருக்குள் உயர்நிலைக் கல்வியை (பத்தாம் வகுப்பு வரை)கொண்டு செல்ல உள்ளது.

வியாழன், பிப்ரவரி 02, 2012

""இங்கு ஒரு தடவை சிறப்புத் தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்து தான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது,'' என, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் பேசினார்.
Blogger Widgets
Back to TOP Testf