flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

பிளஸ் 2 பாடத் திட்டங்களை மாற்ற தமிழக அரசு திட்டம்:அறிமுகமாகி 8 ஆண்டுகள் ஆனதால் நடவடிக்கை

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால், புதிய பாடத் திட்டங்களை தயாரிப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.2004ல் அறிமுகம்: பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2004ல், பிளஸ் 1 வகுப்புகளுக்கும், 2005ல், பிளஸ் 2 வகுப்புகளுக்கும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்-


சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மே இறுதியில், ஆசிரியர் தகுதித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை, ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காலியிடங்கள் நிரப்பப்படும்: கல்வி அமைச்சர் சிவபதி அறிக்கை
பொதுத்தேர்வு நடைபெறும் நேரத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் விடுப்பு எடுக்கக்கூடாது என தமிழக கல்வி அமைச்சர் சிவபதி கூறியுள்ளார். சென்னையில் நடந்த மாவட்ட கல்வி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாணவர்களுக்கோ, தேர்வு எழுதும் இடங்களில் உள்ள பிரச்னைகள் இருந்தால் அதனை தீர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். கிராமப்புறங்களில் தேர்வு எழுத தேவையான பெஞ்ச் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பதவியிடம் ஒருவாரத்தில் நிரப்பப்படும். 430 பணியிடத்திற்கு தமிழக தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். 710 இளநிலை உதவியாளர் பதவியிடங்கள் தற்காலிக ஊழியர்கள் மூலம் கொண்டு நிரப்பப்படும் என கூறினார்.

திங்கள், பிப்ரவரி 20, 2012

 அலுவலக காலிப்பணியிடம் நிரப்பஆரம்பப்பள்ளி ஆசிரியர் கோரிக்கைஅலுவலக காலிப்பணியிடம் நிரப்பஆரம்பப்பள்ளி ஆசிரியர் கோரிக்கை
மோகனூர்: "தொடக்ககல்வித் துறையின் நிர்வாக நலன், ஆசிரியர் நலன் கருதி, உதவித் தொடக்கக்கல்வி அலுவலக காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, வட்டார நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், மோகனூரில் நடந்தது. வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் நிர்மலா வரவேற்றார்.
G.O Ms.No.36 February 17, 2012 பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு மற்றும் டிசம்பர் 2010 மற்றும் அதற்கு முந்தைய தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டத்தின்படி 8ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏப்ரல் 2012 மற்றும் ஏப்ரல் 2013ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள இரு பருவத் தேர்வுகளுக்கு மட்டும் பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வெழுத அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
கல்விமுறையை மாற்றி அமைக்கவேண்டும்:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்

                           அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க இன்றைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார்.
கோவை பீளமேடு கொடிசியா கண்காட்சி அரங்கில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 16வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிறப்புரையாற்றினார்.

சனி, பிப்ரவரி 18, 2012

                                  விருதுநகர் மாவட்டத்தில், ஆசிரியருக்கு மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததால், பள்ளிகளில் அதிகாரிகள் மொபைல் போன் ரெய்டு நடத்தினர். பள்ளிகளில், மாணவர்களால், ஆசிரியருக்கு கொலை மிரட்டல் வருவதால், பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் ஆசிரியர் கண்டிப்பால், மாணவர் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறுகின்றன. மாணவர்களில் பலர், பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்துவதாக புகார் வந்தது.
 குழந்தையை சேர்க்க மறுத்தால் தலைமை ஆசிரியருக்கு அபராதம்
"பள்ளியில், குழந்தைகளை சேர்க்க மறுக்கும் தலைமை ஆசிரியருக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாயும், அதே தவறை மீண்டும் செய்தால் 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்' என, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள், விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, சென்னையில் நேற்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு ! | வினவு!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 8 லட்சம் விண்ணப்பங்கள் : விண்ணப்பம் ரூ.50; தேர்வுக் கட்டணம் ரூ.500
மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
Blogger Widgets
Back to TOP Testf