flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

புதன், ஏப்ரல் 04, 2012

25 சதவீத மானியத்துடன் பள்ளிகள் துவங்க தனியாருக்கு அழைப்பு

இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், மேல்நிலைப் பள்ளிகளை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. அரசு - தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தில், பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் (பின்னடைவு) காலியிடங்களுக்கு பரிந்துரை மற்றும் பதிவு மூப்பு விவரங்கள் அரசு இணையதளத்தில் அறியலாம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், தலைவர் அவர்களிடமிருந்து 314 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 48 சிறுபான்மையின பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிட அறிவிக்கை பெறப்பட்டது.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு மத்திய அரசிடம் புகார்.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் அப்துல்மஜீத் கூறியதாவது:
தமிழகத்தில் 37000 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 83 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி காலத்துக்கு பிறகு ஓய்வு ஊதியம் பெறுவது உள்ளிட்ட நலன்களுக்காக மேற்கண்ட ஆசிரியர்கள் பி.எப் செலுத்தி வந்தனர். இது மாதம் ஒன்றுக்கு ரூ 210 கோடி இருக்கும். அதே போல வரி பிடித்தம் உள்ள தொகை மாதம் ஒன்றுக்கு ரூ500 கோடி செலுத்தி வந்தனர். கடந்த 36 ஆண்டுகளாக மேற்கண்ட ஆசிரியர்கள் செலுத்திய தொகையில் நிர்வாகத்தில் உள்ள சிலர் கையாடல் செய்துள்ளனர்.
இதன்படி திருவெறும்பூர் வட்டத்தில் ஆசிரியர்களின் பணம் ரூ74 லட்சம், தருமபுரியில்
ரூ73 லட்சம் , கம்மாவரம் ரூ40 லட்சம், நாகபட்டினத்தில் ரூ1 கோடியே 22 லட்சம் என கையாடல் செய்துள்ளனர். இந்த கையாடல் குறித்து தமிழக அரசிடம் கடந்த 19 ஆண்டுகளாக ஆசிரியர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. பலகட்டமாக போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை. இந்த கையாடல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு கடந்த வாரம் டெல்லி சென்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் , மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், இணை அமைச்சர் புரந்தேஸ்வரி ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தோம். இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அப்துல் மஜீத் தெரிவித்தார்.

திங்கள், ஏப்ரல் 02, 2012

வட்டார வளமைய செலவுத் தொகை விவரம்

2011-2012 ம் கல்வியாண்டில் நாகப்பட்டினம் வட்டார வளமையத்திற்கு வழங்கப்பட்டுள்ள செலவுத் தொகை விவரம்
2011-2012 ம் கல்வியாண்டில் IED மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடத்துவதற்கு பள்ளிக்கு ரூ 5,000 வழங்கப் பட்டுள்ளது.

 B.Ed 2012-2013

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம் பி.எட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் 29.03.2012 முதல் வழங்கப்படுகின்றன. 
விண்ணப்பங்கள் வழங்க கடைசி நாள் :30.04.2012. 
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் :30.04.2012
நுழைவுத் தேர்வு நாள் : 25.05.2012
Kftup :  : www.msuniv.ac.in.- njhiyNgrp vz;- 9487999625

சனி, மார்ச் 31, 2012

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. "ஒரே ஒரு தேர்வு தான்:தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார்.

வெள்ளி, மார்ச் 30, 2012

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல் 12ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப்பு செய்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், நாளை மார்ச் 31ம் தேதி வெளியிடப்படும், என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வை, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.
இதற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் 31ம் தேதி, அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தனித்தேர்வு மாணவர்களுக்கான சான்றிதழ்கள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் வழங்கப்படும்.
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
 ந.க.எண். 008118 / டி 2 / 2012 நாள். 21.2.2012
2011 - 12 ஆம் ஆண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட தொடக்கப்பள்ளிக்கு புதிய  தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் தோற்றுவித்து அதனை நிரப்புவதற்கான  கலந்தாய்வு நாளை (31-03-2012) நடத்தப்பட உள்ளது .
ஏற்கெனவே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து இடைநிலை ஆசியராக நிலையிறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தவிடப்பட்டுள்ளது.
மேலும் அப்பள்ளியில் பணியில் இளையோராக உள்ளவருக்கு பணியிட மாறுதல் வழங்கவும் உத்தேசிக்கப் பட்டுள்ளது. 

நாள். 31.03.2012 
இடம் : அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்.
Blogger Widgets
Back to TOP Testf