G.O Ms.No.15 January 23, 2012 பள்ளிக் கல்வி - 2009-2010 மற்றும் 2010-2011ஆம் கல்வியாண்டில்
நிலையுயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது (இவை அனைத்திற்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப் பட்டுள்ளது .)
ஞாயிறு, ஜனவரி 29, 2012
தமிழ்நாடு தொடக்கப் பள்ளியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் 28-01-2112 சென்னை மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்றது. 10000 ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பிக்கச் செய்தனர். மாநில தலைவர் கோ. காமராஜ் தலைமை தாங்கினார். அகில இந்திய ஆசிரியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் :
1. பள்ளிக்கல்வியில் தனியார் கூட்டுப் பொறுப்பை கண்டித்தும்
2..6 வது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்யவும்
3. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை முற்றிலும் கைவிடக்கோரியும்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புகைப்படங்கள்:

வெள்ளி, ஜனவரி 27, 2012
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இன்று(27-1-2012) பள்ளிக்கல்வித்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 4 கோடியே 68 லட்சத்து 14 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டடம் , ஆய்வகம், கழிவறை, குடிநீர் வசதி, சுற்றுசுவர் மற்றும் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை காணொலிக்காட்சி (Video Conferencing ) மூலம் திறந்து வைத்தார் View more Details
செவ்வாய், ஜனவரி 24, 2012
விரைவில்....... தமிழக அரசின் மூலமாக தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நியமிக்க உத்தரவு கிடைக்கும் என நம்புகிறோம் ....
இதில் காலியாக உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தலின் போது ஏற்பட்ட புதிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிடங்களும் அடங்கும் ...
சனி, ஜனவரி 21, 2012
பத்தாம் வகுப்பு வினாத்தாள் அமைப்பில் (புளூ பிரின்ட்), மீண்டும் சில
மாற்றங்களைச் செய்து, புதிய மாதிரி வினாத்தாளை, தேர்வுத்துறை
வெளியிட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வு முடிந்த நிலையில், வினாத்தாள் அமைப்பை மீண்டும் மாற்றியிருப்பது, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தலைசுற்றலை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:""பகுதிநேர ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள், இம்மாத
இறுதிக்குள் முடிந்துவிடும். பிப்ரவரி முதல் வாரத்தில், பணி நியமன
உத்தரவுகள் வழங்கப்படும்,'' என, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர்
முகம்மது அஸ்லம் தெரிவித்தார்.அரசுப் பள்ளிகளில், பகுதி நேர அடிப்படையில்,
உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்கள், 16,549
பேரை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாதம், 15ம் தேதிக்குள்,
நேர்முகத் தேர்வு பணிகளை முடித்து, 27ம் தேதியில் இருந்து, அனைவரும்
பணிகளில் சேரும் வகையில், நடவடிக்கை எடுக்க திட்டமிடப் பட்டிருந்தது.ஆனால்,
பல மாவட்டங்களில், அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்ததால், நேர்முகத்
தேர்வுப் பணிகள், இம்மாதம் இறுதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளன.இதுகுறித்து,
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம் கூறியதாவது: சில
மாவட்டங்களில், அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதனால், நேர்முகத்
தேர்வு பணிகள் முடியவில்லை. இம்மாத இறுதிக்குள் இந்தப் பணிகள் முடிந்ததும்,
பிப்ரவரி முதல் வாரத்தில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, பணி நியமன
உத்தரவுகள் அனுப்பப்படும்.இவ்வாறு அஸ்லம் கூறினார்.
வெள்ளி, ஜனவரி 20, 2012
"தானே' புயல் நிவாரணத்துக்காக, தமிழக அரசு ஊழியர்களின் ஒரு நாள்
சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளை
சீரமைக்க, அதிகளவு நிதி தேவைப்படும் என்பதால், தாராளமாக நிதி வழங்கும்படி,
முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, பல்வேறு அரசு
ஊழியர் சங்கங்கள், தங்கள் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை, புயல்
நிவாரணத்துக்கு தர தயாராக இருப்பதாக, அரசுக்கு கடிதங்கள் கொடுத்திருந்தனர்.
இதை ஏற்று, தலைமைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: ஒரு நாள் சம்பளத்தை வழங்க விரும்பும் ஊழியர்கள், தங்கள் சம்மதத்தை, சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அதிகாரியிடம் எழுத்துபூர்வமாக கொடுக்க வேண்டும்.
* பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும்.
* ஒரு நாளுக்கு மேலாக சம்பளத்தை தர விரும்பும் ஊழியர், எத்தனை நாட்கள் பிடித்தம் செய்யலாம் என்பதை எழுதிக் கொடுக்கலாம்.
* இந்த உத்தரவு, அனைத்து உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், கழகங்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் இதர நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
* இந்த நன்கொடை என்பது, முற்றிலும் தானாக விரும்பி வந்து கொடுக்கின்றனர் என்பதை, சம்பள கணக்கு அதிகாரி உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், ஜனவரி 18, 2012
தனியார் Mobile நிறுவனங்கள் வந்த பிறகு BSNL (Bharat Sanchar Nigam
Limited) நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. இவ்வளவு நாள் தூங்கிக்
கொண்டிருந்த BSNL நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி வந்துள்ளது. BSNL நிறுவனம்
ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது உங்களுக்கு விருப்பமான
BSNL நம்பரை இனி நீங்கள் Online-ல் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த வசதியை முதன் முதலில் நவம்பர் 1, 2011- ல் ஆந்திராவில்
அறிமுகப்படுத்தியது BSNL நிறுவனம். மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த
வசதியின் மூலம் 1.2 லட்சம் பேர் புதிதாக சேர்ந்தனர். இந்த மாபெரும்
வரவேற்ப்பை அடுத்து இந்த வசதியை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளது
BSNL நிறுவனம். இந்த வசதியின் மூலம் 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்
கிடைப்பார்கள் என BSNL கணித்துள்ளது.
BSNL நிறுவனத்தின் சேர்மன் R.K. Upadhyay அறிவிப்பு கீழே
“Enthused by the success of the scheme in Andhra Pradesh, BSNL has now decided to launch the scheme all over the country. BSNL will set targets for the scheme after watching the initial response. We expect that the scheme will attract more than 20 lakh new subscribers”
ஆன்லைனில் விருப்பமான BSNL நம்பரை தேர்வு செய்ய:
சென்னை வாடிக்கையாளர்கள்-http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/ch/gsm_choice.asp
தமிழ்நாட்டின் இதரபகுதியினர்- http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/tn/gsm_choice.asp
இதர மாநிலத்தில் வசித்தால் – http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/choose_ur_no.html
நீங்கள் இருக்கும் பகுதிக்கு ஏற்ப உள்ள link-ல் click செய்து BSNL
தளத்திற்கு செல்லவும். அங்கு இடது புறத்தில் நம்பர்களின் பட்டியல்
இருக்கும். இதில் ஒவ்வொரு link-ல் சுமார் 98,000 நம்பர்களுக்கு மேல்
உள்ளது. அதில் உங்கள் பிடித்த விருப்பமான நம்பரை தேர்வு செய்த பின்னர் மேலே
உள்ள RESERVE NUMBER என்பதை click செய்யவும்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு கூடுதல் சீருடைகள், காலணிகள்,
புத்தகப்பைகள், ஆகியவற்றை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு
வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும், தரமான கல்வியை, அடிப்படை உள்கட்டமைப்பான வசதிகள் நிறைந்த சூழ்நிலைகளில் பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார்.
இதன் அடிப்படையில், 2012-13ம் ஆண்டில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப்பள்ளிகள் ஆகியவற்றில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சத்துணவுத்திட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இரண்டு சீருடைகளுடன் கூடுதலாக இரண்டு சீருடைகள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 4 சீருடைகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும். 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதில் முழுக்கால் சட்டையும், பெண்களுக்கு பாவாடை தாவணிக்கு பதில் சல்வார் கமீஸ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 418 மாணவர்களும், 23 லட்சத்து 51 ஆயிரத்து 660 மாணவிகள் என மொத்தம் 46 லட்சத்து 85 ஆயிரத்து 078 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். அரசுக்கு 259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.
மேலும் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா ஒரு காலணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 35 ஆயிரத்து 556 மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் 96 ரூபாய் மதிப்பில் ஒரு காலணியும், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 27 லட்சத்து 95 ஆயிரத்து 639 மாணவ மாணவியர் ஒவ்வொருவருக்கும் 127 ரூபாய் மதிப்பில் ஒரு காலணியும், 9 முதல் 10ம் வகுப்பு படிக்கும் 18 லட்சத்து 5 ஆயிரத்து 933 மாணவ மாணவியருக்கு 142 ரூபாய் செல்வில் ஒரு காலணியும் வழங்கவும், அதனை இந்த ஆண்டே வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 94 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஒரே மாதிரியான புத்தகப்பைகள், கற்றலுக்கு தேவையான ஜாமென்ட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு இதுவரை கிடைக்கப்பெறாத கலர் பென்சில்கள் மற்றும் புவியியல்படங்களை இந்த கல்வியாண்டு முதல் 2012-13 முதல் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு 75 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும், 4 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும், 8 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 125 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும் வழங்கப்படும். இதன் மூலம் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவியர்களும் பயன்பெறுவர். இதேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 35 ரூபாய் மதிப்புள்ள ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனை இரண்டாண்டுகளுக்கு பயன்படுத்தலாம். இதனையடுத்து 6,8,10 வகுப்பு மாணவ மாணவியருக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனால் 46 லட்சத்து ஓர் ஆயிரத்து 572 மாணவ மாணவிகள் பயன்பெறுவர்.
1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 20 ரூபாய் மதிப்புடைய கலர்பென்சில்கள் வழங்கப்படும். இதனால் 35 லட்சத்து 556 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள். 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 50 ரூபாய் மதிப்புள்ள புவியியல் வரை படங்கள் வழங்கப்படும். இதன் மூலம் 46, 01,572 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். புத்தகப்பை, ஜாமென்ட்ரி பாக்ஸ், கலர்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 12-13ம் கல்வியாண்டில் 136 கோடியே 50 லட்ச ரூபாய் செலவு ஏற்படும்.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபு வகுப்பை சேர்ந்த மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் வழங்கப்படும் பரிசுத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், 2ம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும, 3ம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் முதல் பரிசாக 6 ஆயிரம் ரூபாயும், 2ம் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும், 3வது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இதனால் அரசுக்கு 11 லட்சத்து 52 ஆயிரத்து ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Order clickhere

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பவனி வரும் "டேப் லெட்" கணனி "ஆகாஷ்" தற்போது 22 கோடி தேவைப்படுகிறது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
AboveNews From.... Click here
மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ள "ஆகாஷ்" கணனியை இந்த blog ல் உள்ள link மூலம் இதனை பதிவு செய்திடலாம். 2012 march க்கான பதிவு நடைபெறுகிறது.