flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

ஞாயிறு, மே 06, 2012

அரசு பள்ளிகளில், குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் எண்ணிக்கை, அதிகளவில் இருப்பதால், அவர்களை மாறுதல் செய்த பிறகே, ஆசிரியர் பொது மாறுதல், "கவுன்சிலிங்' நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே தான், விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடமாறுதல் "கவுன்சிலிங்'


தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 

நடப்பாண்டில் சுமார் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுகின்றனர்.இதில் இடைநிலை உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களிடமிருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வு தற்காலிக சீனியாரிட்டி பட்டியலில் 1,227 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஆசிரியர்கள் பொதுமாறுதல் தொடர்பாக விண்ணப்பிக்கலாம் என்று நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை, நேற்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்திலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல் வழங்க கவுன்சலிங் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
அதில், “அனைத்து அரசு மற்றும் நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் விருப்பம் உள்ளவர்கள் பொது மாறுதல் கவுன்சலிங்கில் பங்கேற்கலாம். அதற்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் 28ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
அவற்றை தொகுத்து 30ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருவோர் விண்ணப்பங்கள் மே 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நேற்று மாலை அவசரம் அவசரமாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில் ????? மறு உத்தரவு வரும் வரை யாரும் மாறுதல் விண்ணப்பங்கள் பெறக்கூடாது ????? என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும், கவுன்சலிங் இல்லாமல் மறைமுகமாக மாறுதல் வழங்கப் போகிறார்களோ என்று சந்தேகம் அடைந்துள்ளனர்.

சனி, ஏப்ரல் 28, 2012


இனி குழந்தைகள் டி.வி. பார்க்கலாம்!!! தப்பில்லை

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் கேபிள் டிவி வழியாக புதிய அரசு கல்வி ஒளிபரப்புச் சேவையை துவங்க உள்ளது. இந்த தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு கல்வியை அளிக்கும் நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆர்வமுள்ள ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினந்தோறும் 1 முதல் 12ம் வகுப்பு பாடத்திட்டங்களில் இருந்து பாடப்பகுதிகள் திறமை வாய்ந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட உள்ளது.

இதற்கான கல்வி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பணியில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில் ஆர்வமும், ஆனுபவமும் உள்ள ஆசிரியர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும், அவர்களுக்கு இன்னும் சம்பள வழங்கப்பட வில்லை. அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், உடற்கல்வி, ஓவியம், கைத்தொழில் மற்றும் கணினி படிப்பு முடித்தவர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மார்ச் முழுவதும் பணியாற்றியும், முதல்மாத சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏப்ரல் மாதமும் முடிய உள்ளது.

முதன்மைகல்வி அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: சிறப்பாசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., மூலம் நிதி ஒதுக்கி, அந்தந்த கிராம கல்வி குழுவில் உள்ள தலைவர் மற்றும் தலைமையாசிரியர் கையெழுத்திட்டு, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். மார்ச் மாதத்தில் இடையிலும், கடைசியிலும் சிலர் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் குறித்து கணக்கிடப்படுகிறது. ஒரு மாதத்தில் 12 நாள்கள் பணியாற்றி இருந்தால், முழு சம்பளம் வழங்கப்படும். குறைவான நாட்கள் எனில், அதற்கேற்ப சம்பளம் வழங்கப்படும். சில பள்ளிகளில் இருந்து ஆசிரியர் பட்டியல், பணியாற்றிய நாட்கள் விபரம் வரவில்லை. வந்தபின், ஒருசில நாட்களில் சம்பளம் வழங்கப்படும், என்றார்.
"கல்வி இணை செயல்பாடுகளில், பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை, இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு' முறை குறித்த பயிற்சி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.


ராமநாதபுரம், மண்டபம் ஒன்றியங்களில் நடந்த பயிற்சியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி ஆய்வு செய்து பேசியதாவது:

வரும் கல்வி ஆண்டிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரு பருவமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒரு பருவமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு பருவமும் நடத்தப்படுகிறது. ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகம் மட்டுமே.இந்தியாவில் முதன் முதலாக தமிழகத்தில் தான் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களின் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது. மாணவர்கள் எதில் திறமையாக இருக்கின்றனரோ அதில் ஈடுபடுத்துவது. இதன் மூலம் கல்வியைத் தவிர, மற்ற இணைச் செயல்களான வாழ்க்கை கல்வி, தையல், ஓவியம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணியில், 16 ஆயிரத்து 450 பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். ஆசிரியர்களும் இதில் பங்கேற்க வேண்டும். முப்பருவ கல்வி முறையில், 40 மதிப்பெண்கள் வளரறி மதிப்பீடாகவும் (செயல்பாடுகளை வைத்து), 60 மதிப்பெண்கள் தொகுத்தறி மதிப்பீடாகவும் (தேர்வு முறையில்) வழங்கப்படும். செயல்வழி கற்றல் முறை (அட்டை முறை) இதனால், மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு, ஒன்பதாம் வகுப்பு, அதற்கு அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பில், இந்த முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படும். இவ்வாறு பழனிச்சாமி கூறினார்
"தமிழாசிரியர்" என்பதை, இனி, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)" என ஆசிரியர்கள் குறிப்பிட வேண்டும் என்று, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு வந்துள்ள உத்தரவு: "பள்ளி உதவி ஆசிரியர்" என்பது, இனிமேல், பட்டதாரி ஆசிரியர் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இனிமேல் தமிழாசிரியர் என எழுதாமல், அதற்கு பதிலாக, பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) எனவும், அதேபோல் பிற ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்), பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) என, பாட வாரியாகக் குறிப்பிட வேண்டும்.

பெயர் மாற்றம் செய்யப்பட்டதையே, வருகை பதிவேடு, ஆவணங்கள் உட்பட அனைத்திலும் குறிப்பிட வேண்டும். தமிழக தமிழாசிரியர் கழக கோரிக்கைப்படி, இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 27.04.2012.

2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.


தற்போது மேற்படி பணிகளை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை நிறுத்தி வைக்கும்ப்படும்படி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

வியாழன், ஏப்ரல் 26, 2012

திருத்தி அச்சடிக்கப்பட்ட, புதிய பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள், இன்று முதல் மாநிலம் முழுவதும் விற்பனைக்கு வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான புத்தகங்கள், ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பின், பள்ளி நிர்வாகங்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், தனியார் பள்ளிகளுக்கான விற்பனை, இன்று முதல் நடைபெறும் எனவும், பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

 தி.மு.க., ஆட்சியில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டு, முதலில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு, திட்டம் அமல்படுத்தப்பட்டது. மீதியுள்ள வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்டது. பாடப் புத்தகங்களில், கருணாநிதியைப் பற்றியும், தி.மு.க.,வைப் பற்றியும் பல கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததாலும், போதிய அளவிற்கு தரம் இல்லை என்பதாலும், இந்த கருத்துக்கள் நீக்கப்பட்டபின், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
Blogger Widgets
Back to TOP Testf