இடைநிலை
ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை
மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
"ஒரே
ஒரு தேர்வு தான்:தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு
செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில்
அறிவித்தார்.
சனி, மார்ச் 31, 2012
வெள்ளி, மார்ச் 30, 2012
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல் 12ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப்பு செய்துள்ளது.
ஆசிரியர்
பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், நாளை மார்ச் 31ம் தேதி
வெளியிடப்படும், என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா
தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வை, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண். 008118 / டி 2 / 2012 நாள். 21.2.2012
2011
- 12 ஆம் ஆண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ்
நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட தொடக்கப்பள்ளிக்கு புதிய தொடக்கப்பள்ளி
தலைமையாசிரியர் பணியிடம் தோற்றுவித்து அதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு நாளை (31-03-2012) நடத்தப்பட உள்ளது .
ஏற்கெனவே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து இடைநிலை ஆசியராக நிலையிறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தவிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து இடைநிலை ஆசியராக நிலையிறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தவிடப்பட்டுள்ளது.
மேலும் அப்பள்ளியில் பணியில் இளையோராக உள்ளவருக்கு பணியிட மாறுதல் வழங்கவும் உத்தேசிக்கப் பட்டுள்ளது.
நாள். 31.03.2012
இடம் : அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்.
செவ்வாய், மார்ச் 27, 2012
தமிழக பட்ஜெட் 2012-2013
சட்டப்பேரவையில்
நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், 2012 - 13 ஆம் நிதியாண்டுக்கான தமிழக
அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து தனது உரையை தொடங்கினார்.
தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
* 2011-12 நிதியாண்டில் தமிழகஅரசின் சொந்த வரி வருவாய் ரூ 59,932 கோடி
* வணிக வரி வருவாய் ரூ.46,678 கோடி
* வரி இல்லாத இனங்களின் மூலம் வருவாய் ரூ.6,032 கோடி
சனி, மார்ச் 24, 2012
பள்ளிக் கல்வித் துறையில், 397 இளநிலை உதவியாளர்களை நியமனம் செய்வதற்கான
கவுன்சிலிங், 29ம் தேதி சென்னையில் நடக்கிறது. டி.என்.பி.எஸ்.சி.,
தொகுப்பூதிய பணியாளர்களுக்கு என, சிறப்பு போட்டித் தேர்வை (குரூப்-4)
நடத்தியது. இதன்மூலம், பள்ளிக் கல்வித் துறைக்கு, 397 இளநிலை உதவியாளர்கள்
பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., அளித்துள்ளது. இவர்களுக்கு, பணி நியமனம்
வழங்குவதற்கான கவுன்சிலிங், சென்னை, அசோக்நகரில் உள்ள, அரசு மகளிர்
மேல்நிலைப் பள்ளியில், 29ம் தேதி காலை, 10 மணிக்கு நடைபெறுகிறது.இதில்
கலந்து கொள்பவர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யிடம் இருந்து பெற்ற அறிவிப்புக்
கடிதம் மற்றும் தேர்வுக்கான "ஹால் டிக்கெட்' ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்
என, பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
புதன், மார்ச் 21, 2012
BSNL நிறுவனம் மிகக் குறைந்த விலை Tablet-ஐ வெளியிட்டுள்ளது. BSNL
நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3,250/-
விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகக்
குறைந்த விலை ஆகாஷ் Tablet இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஆனால் இது
சந்தையில் எளிதாக கிடைக்கவில்லை. ஆகவே ஆகாஷ் Tablet-க்கு முன்பதிவு செய்து
காத்திருக்காமல் இந்தப் புதிய T-PAD IS701R Tablet முன்பதிவு செய்து
பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த Tablet விற்பனைக்கு வருகின்றன.
செவ்வாய், மார்ச் 20, 2012
திங்கள், மார்ச் 19, 2012
பதவி உயர்வு குறித்து விளக்கம் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.
01.01.2011 பதவி உயர்வுதேர்தோர் பட்டியலில் உள்ள பதவி உயர்விற்காக
காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் 30 பேர் அரசாணை எண்.15
பள்ளிக்கல்வித்துறைநாள்.23.01.2012
எதிர்த்து தொடுத்த வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க மதுரை
உயர்நிதீமன்ற கிளை அதிரடி உத்தரவு. அடுத்தவாரம்செவ்வாய் / புதன்கிழமைக்குள்
அரசு பதிலளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வேறு 17ஆசிரியர்கள் தொடுத்த வழக்கிலும் தொடக்ககல்வி
இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஞாயிறு, மார்ச் 18, 2012
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான(TET) பாடப்பகுதி மற்றும் வழிகாட்டுதல் விவரங்கள் CLICK HERE
அண்ணமலைப் பல்கலைக்கழக DDE UG&PGதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. Click Here
G.O Ms.No.47 March 2, 2012
பள்ளிக் கல்வித் துறை - சட்டமன்ற பேரவை
விதி எண்.110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர
பணிகளுக்கான 5000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை
வெளியிடப்படுகிறது.
G.O Ms.No.36 February 17, 2012 பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம்
- தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கான
குறைந்த பட்ச வயது வரம்பு மற்றும் டிசம்பர் 2010 மற்றும் அதற்கு முந்தைய
தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டத்தின்படி 8ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி
பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏப்ரல் 2012 மற்றும் ஏப்ரல்
2013ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள இரு பருவத் தேர்வுகளுக்கு மட்டும் பழைய
பாடத்திட்டத்தின்படி தேர்வெழுத அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.