flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

செவ்வாய், ஜனவரி 18, 2011

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது - 2010
பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமது சொந்த நிதியிலிருந்து தோற்றுவிக்கப்பட்டுள்ள கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வோராண்டும் செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படவுள்ளது. 2010 ஆம் ஆண்டு விருதிற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

    இவ்விருது இந்திய நாட்டில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளுள் ஒன்றாகும்.
    ஒரு மில்லியன் ரூபாய்க்கான காசோலை, கலைஞர் மு. கருணாநிதியின் உருவம் தாங்கிய 80 கிராம் தங்கப் பதக்கம், ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலை, பாராட்டிதழ் ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்.
    ஒவ்வோராண்டும் இந்த விருது அறக்கட்டளையை நிறுவிய கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று வழங்கப்படும்.
    செம்மொழித் தமிழாய்விற்குச் சீரிய முறையில் பங்காற்றியுள்ள அறிஞர் அல்லது நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்பெறும். இப்பங்களிப்பு பண்டைத் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் பற்றிய புதிய கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் உலக அளவில் ஏற்புடையதாகவும் அமைய வேண்டும். கீழ்க்காணும் துறைகளில் மேற்கொண்ட ஆய்வாக அது அமையலாம்:

  1.     தொல்லியல்
  2.     கல்வெட்டியல்
  3.     நாணயவியல்
  4.     பண்டை இலக்கணமும் மொழியியலும்
  5.     இலக்கியத் திறனாய்வு
  6.     படைப்பிலக்கியம்
  7.     மொழிபெயர்ப்பு
  8.     இசை, நடனம்,  நாடகம், ஓவியம், சிற்பம்

    தனித்தன்மையும் மேன்மையும் உலகளாவிய ஏற்பும் பெற்ற ஒரு நூலிற்காக அல்லது ஓர் அறிஞரின் வாழ்நாள் பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படும்.
    விருது பெறும் அறிஞர் எந்நாட்டினைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; விருது பெறும் நூல் அறிவுலகைக் கவர்ந்த பெருமையுடையதாயின் எந்த மொழியிலும் இருக்கலாம்.
    விருதிற்குத் தகுதியானவரின் பெயரைக் கீழ்க்கண்டவர்கள் பரிந்துரைசெய்யலாம் :
    ஒருவர் தம்முடைய பெயரைத் தாமே பரிந்துரை செய்துகொள்வதுகூடாது.
        பரிந்துரைப் படிவத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
    பரிந்துரையை 2011 பிப்ரவரி 18 ஆம் நாளுக்குள் இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், எண்.6, பாலாறு இல்லம், காமராசர் சாலை, சேப்பாக்கம், சென்னை 600 005 என்னும் முகவரிக்கு அஞ்சல் வழி அனுப்பிவை க்கவேண்டும்.

Blogger Widgets
Back to TOP Testf