flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

ஞாயிறு, ஜனவரி 15, 2012

வரும் 12-வது ஐந்தாண்டு திட்ட காலமான 2017-ம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் உயர்நிலைப்பள்ளிகள் தேவைப்படும் என மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது. தென்னிந்திய‌ைவை ‌பொறுத்தவரையில் கர்நாடகாவில் ஆயிரத்து 241, ஆந்திராவில் 456, கேரளாவில் 112, தமிழகத்தில் 690 உயர்நிலைப்பள்ளிகள் தேவைப்படுகின்றன. மேலும் நாட்டின் மிக பெரிய மாநிலமான உ.பி.,யில் 3 ஆயிரம் பள்ளிகளும், குஜராத்தில் 2 ஆயிரத்து 256 பள்ளிகள், ம.பி.,யில் 2 ஆயிரத்து 180 பள்ளிகளும், பீகாரில் ஆயிரத்து 264 மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் ஆயிரத்து 6-ம் தலைநகர் டில்லியில் 51 பள்ளிகளும் கூடுதலாக தேவைப்படுகி்ன்றன.மேலும் மத்திய அரசின் திட்டமான ராஷ்டீரிய மத்யமிக்சிக்ஷா அபியான் திட்டத்தை +1மற்றும் +2 வகுப்புகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது. மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தம்முடைய திறமையை வளர்த்துக்கொள்வதற்கு குறந்தை பட்சம் அடிப்படைகல்வியை கற்றிருக்க வேண்டும் எனவும் தற்போது நடைமுறையில் உள்ள சர்வ சிக்ஷ அபியான் திட்டம் நல்ல பயனை தந்துள்ளதாகவும் கூறியுள்ளது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்‌சத்து 23 ஆயிரம் பள்ளிகள் இயங்கிகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திட்டக்கமிஷன் மூலம் அமைக்கப்பட்ட குழு தயாரித்த இந்த அறிக்கை பிரதமர் தலைமையிலான ‌தேசிய வளர்ச்சி கவுன்சிலிடம் சமர்பிக்கப்பட்டு இறுதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Blogger Widgets
Back to TOP Testf