flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

செவ்வாய், ஜனவரி 31, 2012

G.O Ms.No.15 January 23, 2012  பள்ளிக் கல்வி - 2009-2010 மற்றும் 2010-2011ஆம் கல்வியாண்டில் நிலையுயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது  (இவை அனைத்திற்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப் பட்டுள்ளது .)

ஞாயிறு, ஜனவரி 29, 2012

தமிழ்நாடு தொடக்கப் பள்ளியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் 28-01-2112 சென்னை மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்றது. 10000 ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பிக்கச் செய்தனர். மாநில தலைவர் கோ. காமராஜ் தலைமை தாங்கினார். அகில இந்திய ஆசிரியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் :
1. பள்ளிக்கல்வியில் தனியார் கூட்டுப் பொறுப்பை கண்டித்தும்
2..6 வது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்யவும்
3. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை முற்றிலும் கைவிடக்கோரியும்

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புகைப்படங்கள்:

வெள்ளி, ஜனவரி 27, 2012

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இன்று(27-1-2012) பள்ளிக்கல்வித்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 4 கோடியே 68 லட்சத்து 14 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டடம் , ஆய்வகம், கழிவறை, குடிநீர் வசதி, சுற்றுசுவர் மற்றும் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை காணொலிக்காட்சி (Video Conferencing ) மூலம் திறந்து வைத்தார் View more Details

செவ்வாய், ஜனவரி 24, 2012

விரைவில்....... தமிழக அரசின் மூலமாக தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நியமிக்க உத்தரவு கிடைக்கும் என நம்புகிறோம் ....
இதில் காலியாக உள்ள  தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தலின் போது ஏற்பட்ட  புதிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிடங்களும் அடங்கும் ...

சனி, ஜனவரி 21, 2012

பத்தாம் வகுப்பு வினாத்தாள் அமைப்பில் (புளூ பிரின்ட்), மீண்டும் சில மாற்றங்களைச் செய்து, புதிய மாதிரி வினாத்தாளை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அரையாண்டுத் தேர்வு முடிந்த நிலையில், வினாத்தாள் அமைப்பை மீண்டும் மாற்றியிருப்பது, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தலைசுற்றலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:""பகுதிநேர ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள், இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். பிப்ரவரி முதல் வாரத்தில், பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும்,'' என, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம் தெரிவித்தார்.அரசுப் பள்ளிகளில், பகுதி நேர அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்கள், 16,549 பேரை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாதம், 15ம் தேதிக்குள், நேர்முகத் தேர்வு பணிகளை முடித்து, 27ம் தேதியில் இருந்து, அனைவரும் பணிகளில் சேரும் வகையில், நடவடிக்கை எடுக்க திட்டமிடப் பட்டிருந்தது.ஆனால், பல மாவட்டங்களில், அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்ததால், நேர்முகத் தேர்வுப் பணிகள், இம்மாதம் இறுதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளன.இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம் கூறியதாவது: சில மாவட்டங்களில், அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதனால், நேர்முகத் தேர்வு பணிகள் முடியவில்லை. இம்மாத இறுதிக்குள் இந்தப் பணிகள் முடிந்ததும், பிப்ரவரி முதல் வாரத்தில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் அனுப்பப்படும்.இவ்வாறு அஸ்லம் கூறினார்.

வெள்ளி, ஜனவரி 20, 2012

"தானே' புயல் நிவாரணத்துக்காக, தமிழக அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க, அதிகளவு நிதி தேவைப்படும் என்பதால், தாராளமாக நிதி வழங்கும்படி, முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், தங்கள் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை, புயல் நிவாரணத்துக்கு தர தயாராக இருப்பதாக, அரசுக்கு கடிதங்கள் கொடுத்திருந்தனர்.

இதை ஏற்று, தலைமைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: ஒரு நாள் சம்பளத்தை வழங்க விரும்பும் ஊழியர்கள், தங்கள் சம்மதத்தை, சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அதிகாரியிடம் எழுத்துபூர்வமாக கொடுக்க வேண்டும்.

* பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும்.

* ஒரு நாளுக்கு மேலாக சம்பளத்தை தர விரும்பும் ஊழியர், எத்தனை நாட்கள் பிடித்தம் செய்யலாம் என்பதை எழுதிக் கொடுக்கலாம்.

* இந்த உத்தரவு, அனைத்து உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், கழகங்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் இதர நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

* இந்த நன்கொடை என்பது, முற்றிலும் தானாக விரும்பி வந்து கொடுக்கின்றனர் என்பதை, சம்பள கணக்கு அதிகாரி உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், ஜனவரி 18, 2012

தனியார் Mobile நிறுவனங்கள் வந்த பிறகு BSNL (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.  இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த BSNL நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி வந்துள்ளது. BSNL நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை இனி நீங்கள் Online-ல் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த வசதியை முதன் முதலில் நவம்பர் 1, 2011- ல் ஆந்திராவில் அறிமுகப்படுத்தியது BSNL நிறுவனம். மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த வசதியின் மூலம் 1.2 லட்சம் பேர் புதிதாக சேர்ந்தனர். இந்த மாபெரும் வரவேற்ப்பை அடுத்து இந்த வசதியை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளது BSNL நிறுவனம். இந்த வசதியின் மூலம் 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என BSNL கணித்துள்ளது.
BSNL நிறுவனத்தின் சேர்மன் R.K. Upadhyay அறிவிப்பு கீழே
“Enthused by the success of the scheme in Andhra Pradesh, BSNL has now decided to launch the scheme all over the country. BSNL will set targets for the scheme after watching the initial response. We expect that the scheme will attract more than 20 lakh new subscribers”
ஆன்லைனில் விருப்பமான BSNL நம்பரை தேர்வு செய்ய:
சென்னை வாடிக்கையாளர்கள்-http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/ch/gsm_choice.asp
தமிழ்நாட்டின் இதரபகுதியினர்- http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/tn/gsm_choice.asp
இதர மாநிலத்தில் வசித்தால் – http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/choose_ur_no.html
நீங்கள் இருக்கும் பகுதிக்கு ஏற்ப உள்ள link-ல் click செய்து BSNL தளத்திற்கு செல்லவும். அங்கு இடது புறத்தில் நம்பர்களின் பட்டியல் இருக்கும். இதில் ஒவ்வொரு link-ல் சுமார் 98,000 நம்பர்களுக்கு மேல் உள்ளது. அதில் உங்கள் பிடித்த விருப்பமான நம்பரை தேர்வு செய்த பின்னர் மேலே உள்ள RESERVE NUMBER என்பதை click செய்யவும்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கூடுதல் சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகள், ஆகியவற்றை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும், தரமான கல்வியை, அடிப்படை உள்கட்டமைப்பான வசதிகள் நிறைந்த சூழ்நிலைகளில் பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார்.

இதன் அடிப்படையில், 2012-13ம் ஆண்டில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப்பள்ளிகள் ஆகியவற்றில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சத்துணவுத்திட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இரண்டு சீருடைகளுடன் கூடுதலாக இரண்டு சீருடைகள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 4 சீருடைகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும். 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதில் முழுக்கால் சட்டையும், பெண்களுக்கு பாவாடை தாவணிக்கு பதில் சல்வார் கமீஸ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 418 மாணவர்களும், 23 லட்சத்து 51 ஆயிரத்து 660 மாணவிகள் என மொத்தம் 46 லட்சத்து 85 ஆயிரத்து 078 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். அரசுக்கு 259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.

மேலும் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா ஒரு காலணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 35 ஆயிரத்து 556 மாணவ, மாணவியர் ஒவ்‌வொருவருக்கும் 96 ரூபாய் மதிப்பில் ஒரு காலணியும், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 27 லட்சத்து 95 ஆயிரத்து 639 மாணவ மாணவியர் ஒவ்‌வொருவருக்கும் 127 ரூபாய் மதிப்பில் ஒரு காலணியும், 9 முதல் 10ம் வகுப்பு படிக்கும் 18 லட்சத்து 5 ஆயிரத்து 933 மாணவ மாணவியருக்கு 142 ரூபாய் செல்வில் ஒரு காலணியும் வழங்கவும், அதனை இந்த ஆண்டே வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 94 ‌கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஒரே மாதிரியான புத்தகப்பைகள், கற்றலுக்கு தேவையான ஜாமென்ட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு இதுவரை கிடைக்கப்பெறாத கலர் பென்சில்கள் மற்றும் புவியியல்படங்களை இந்த கல்வியாண்டு முதல் 2012-13 முதல் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு 75 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும், 4 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும், 8 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 125 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும் வழங்கப்படும். இதன் மூலம் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவியர்களும் பயன்பெறுவர். இதேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 35 ரூபாய் மதிப்புள்ள ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனை இரண்டாண்டுகளுக்கு பயன்படுத்தலாம். இதனையடுத்து 6,8,10 வகுப்பு மாணவ மாணவியருக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனால் 46 லட்சத்து ஓர் ஆயிரத்து 572 மாணவ மாணவிகள் பயன்பெறுவர்.

1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 20 ரூபாய் மதிப்புடைய கலர்பென்சில்கள் வழங்கப்படும். இதனால் 35 லட்சத்து 556 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள். 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 50 ரூபாய் மதிப்புள்ள புவியியல் வரை படங்கள் வழங்கப்படும். இதன் மூலம் 46, 01,572 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். புத்தகப்பை, ஜாமென்ட்ரி பாக்ஸ், கலர்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 12-13ம் கல்வியாண்டில் 136 கோடியே 50 லட்ச ரூபாய் செலவு ஏற்படும்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபு வகுப்பை சேர்ந்த மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் வழங்கப்படும் பரிசுத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், 2ம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும, 3ம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் முதல் பரிசாக 6 ஆயிரம் ரூபாயும், 2ம் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும், 3வது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இதனால் அரசுக்கு 11 லட்சத்து 52 ஆயிரத்து ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Order clickhere
உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பவனி வரும் "டேப் லெட்" கணனி "ஆகாஷ்" தற்போது 22 கோடி தேவைப்படுகிறது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
AboveNews From.... Click here

மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ள "ஆகாஷ்" கணனியை இந்த blog ல் உள்ள link மூலம் இதனை பதிவு செய்திடலாம். 2012 march க்கான பதிவு நடைபெறுகிறது.

விருதுநகர்: புதிய ஆசிரியர்கள் நியமனத்தில், ஆசிரியர் தகுதிதேர்வு கட்டுப்பாடு பற்றி குறிப்பிடாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில்
உள்ளனர். மத்திய அரசின் கல்வி உரிமைச்சட்டத்தின் படி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், ஆசிரியருக்கான தகுதி தேர்வு எழுதி, ஐந்து ஆண்டுகளுக்குள் தேர்வானவர்களாக இருக்க வேண்டும், என ,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர்கள் சங்கத்தினர்,"ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தேவையில்லாததது,' என்றனர்.

பல ஆசிரியர்களுக்கு ,வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தி, பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் , கடந்த ஒரு மாதமாக வழங்கப்படும் ஆசிரியர் நியமன உத்தரவில், தகுதி தேர்வு பற்றி குறிப்பிடாமல் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு வருகின்றன. புதிய ஆசிரியர்கள் நியமனத்தில், இந்த கட்டுப்பாடு நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அரசும், பள்ளிக்கல்வித்துறையும் தெளிவான
முடிவினை அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 34 சீனியர் விரிவுரையாளர் பதவிக்கான எழுத்துத்தேர்வு வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி நடைபெறவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இப்போட்டிதேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
போட்டித் தேர்வுக்கான விண்ணப்பம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.50.
தேர்வுக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250.
தேர்வு கட்டணத்தை டி.டி.யாக ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை என்ற முகவரிக்கு பாரத ஸ்டேட் பாங்க், இந்தியன், ஐ.ஒ.பி, கார்ப்பரேஷன், கனரா வங்கிகளில் மட்டுமே எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாக வழங்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
உடுமலை:உடுமலை அருகே, உயர்நிலையாக தரம் பெற்ற பள்ளியில், போதிய வசதிகள் இல்லாததால் மாணவர்கள் திண்டாடுகின்றனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 2008-09ல் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சுற்றுப் பகுதிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு தனி கட்டடம் கட்டும் வரை, அமராவதி நகர் துவக்கப்பள்ளி வளாகத்திலேயே, தற்காலிகமாக உயர்நிலைப் பள்ளி செயல்படும் என, கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், கட்டட வசதி ஏற்படுத்த, இடத்தை தேர்வு செய்யவோ, நிதி ஒதுக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போதிய வகுப்பறை இல்லாத நிலையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, மரத்தடியே வகுப்பறையாக மாறியுள்ளது. மழை காலத்தில், இதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பள்ளிக்கு நிரந்தர கட்டட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஞாயிறு, ஜனவரி 15, 2012

வரும் 12-வது ஐந்தாண்டு திட்ட காலமான 2017-ம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் உயர்நிலைப்பள்ளிகள் தேவைப்படும் என மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது. தென்னிந்திய‌ைவை ‌பொறுத்தவரையில் கர்நாடகாவில் ஆயிரத்து 241, ஆந்திராவில் 456, கேரளாவில் 112, தமிழகத்தில் 690 உயர்நிலைப்பள்ளிகள் தேவைப்படுகின்றன. மேலும் நாட்டின் மிக பெரிய மாநிலமான உ.பி.,யில் 3 ஆயிரம் பள்ளிகளும், குஜராத்தில் 2 ஆயிரத்து 256 பள்ளிகள், ம.பி.,யில் 2 ஆயிரத்து 180 பள்ளிகளும், பீகாரில் ஆயிரத்து 264 மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் ஆயிரத்து 6-ம் தலைநகர் டில்லியில் 51 பள்ளிகளும் கூடுதலாக தேவைப்படுகி்ன்றன.மேலும் மத்திய அரசின் திட்டமான ராஷ்டீரிய மத்யமிக்சிக்ஷா அபியான் திட்டத்தை +1மற்றும் +2 வகுப்புகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது. மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தம்முடைய திறமையை வளர்த்துக்கொள்வதற்கு குறந்தை பட்சம் அடிப்படைகல்வியை கற்றிருக்க வேண்டும் எனவும் தற்போது நடைமுறையில் உள்ள சர்வ சிக்ஷ அபியான் திட்டம் நல்ல பயனை தந்துள்ளதாகவும் கூறியுள்ளது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்‌சத்து 23 ஆயிரம் பள்ளிகள் இயங்கிகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திட்டக்கமிஷன் மூலம் அமைக்கப்பட்ட குழு தயாரித்த இந்த அறிக்கை பிரதமர் தலைமையிலான ‌தேசிய வளர்ச்சி கவுன்சிலிடம் சமர்பிக்கப்பட்டு இறுதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, ஜனவரி 14, 2012

சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள்களை இணையதளத்தில், அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து வந்த ஸ்டேட்போர்டு, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், ஓரியண்டல் உள்ளிட்ட கல்வி முறைகளை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி முறை உருவாக்கப்பட்டது.
இதில், நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு வரையில் சமச்சீர் கல்வி முறை, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.சமச்சீர் கல்வி திட்டத்தில், 9ம் வகுப்பு மற்றும், 10ம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இருந்த பாடத்திட்டங்களுக்கும், சமச்சீர் பாடத்திட்டங்களுக்கும் நிறைய வேறுபாடுகளும் இருந்தன. இதனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இது ஒரு புதிய முயற்சியாகவே அமைந்துள்ளது.

இன்னும், மூன்று மாதத்தில் பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில், தனியார் பள்ளி மட்டுமின்றி, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், வினாக்கள் அமைக்கப்படும் முறை குறித்து குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில், அரசு தேர்வுத்துறை சார்பில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், அறிவியல் பாடங்களுக்கு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாதிரி வினாத்தாள்கள் தேவைக்கேற்ப டவுன்லோடு செய்து கொள்ளும்படி வழி செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் நடக்கும், முதல் பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, இம்மாதிரி வினாத்தாள்கள் மிகுந்த உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.தமிழக அரசு தேர்வுத் துறை இணையதளம் மற்றும் வேறு சில இணைய தள பக்கங்களிலும், இவ்வினாத்தாள்களை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

download link

வெள்ளி, ஜனவரி 13, 2012

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பி.எட் படிப்பிற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது . நுழைவுத் தேர்வு இல்லை .

வியாழன், ஜனவரி 12, 2012

ஒவ்வொரு தொகுதி M.L.A.க்கும் ஒரு E-Mail. I.D கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் "நியாயமான" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். எல்லா M.L.A.க்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால்... உங்கள் கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம். 234 தொகுதி M.L.A.க்கும் தனி தனியே கொடுக்கப்பட்டுள்ளது.....
கள்ளர் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் இன்று துவக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில், 285 அரசு கள்ளர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மாவட்டத்திற்கு ஐந்து அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிகள் வீதம், 15 பள்ளிகளில், இன்று முதல் எல்.கே.ஜி., - யூ.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. தேனி மாவட்டத்தில், முத்தனம்பட்டி, ஏத்தக்கோவில், மார்க்கையன்கோட்டை, ராஜதானி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் எல்.கே.ஜி., - யூ.கே.ஜி.,வகுப்புகள் துவக்கப்படுகின்றன. பிற பள்ளிகளிலும் விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கள்ளர் பள்ளிகள் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.-தினமலர் செய்தி

புதன், ஜனவரி 11, 2012

தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
"தானே' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, தங்களது ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளன . அரசு ஊழியர்கள் சம்மதம் Dinamalar
தொடக்க கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் நியமன இழுத்தடிப்பிற்குக் காரணம், போதுமான பணி இடங்கள் இல்லாதது தான் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் இடங்களில், புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இழுத்தடிப்பு ஏன்?தொடக்க கல்வித் துறைக்கு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு பெற்ற 1,155 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்குவதில், ஒன்பது மாதங்களாக பிரச்னை இருந்து வருகிறது.இவர்களில், 750 பேருக்கு மட்டுமே காலிப் பணியிடங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே, புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் விவகாரம், இடியாப்ப சிக்கலாக நீடித்துக் கொண்டிருக்கிறது.

நியமன ஆலோசனை:மே 31ம் தேதி, கணிசமான ஆசிரியர்கள் ஓய்வு பெறுவர் என்பதால், அதன் பின் புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யலாமா என, துறை முதலில் ஆலோசித்தது.
ஆனால், ஐந்து மாதங்கள் வரை பணியிடம் வழங்காவிட்டால், பிரச்னை மேலும் பெரிதாகும் என்பதால், தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது.ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளில், பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இடங்களில், இடைநிலை ஆசிரியர்களே பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆரம்பப் பள்ளி வகுப்புகளுக்கு (1 முதல் 5 வரை) மாற்றிவிட்டு, அந்த இடங்களில், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய, துறை ஆலோசித்து வருகிறது.

இது குறித்து, மாவட்ட வாரியாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று நடைபெறும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில், பணியிடங்களை இறுதி செய்வது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

பொங்கலுக்குள் நல்ல செய்தி:தொடக்க கல்வி இயக்குனர் சங்கரிடம், இந்தப் பிரச்னை குறித்து கேட்ட போது, ""புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தேவை உள்ள இடங்களை கண்டறிந்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களிடம், உரிய புள்ளி விவரங்களைப் பெற்றுள்ளோம். அதன் அடிப்படையில், பொங்கலுக்குள் புதிய ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கப்படும்,'' என்றார்.- ஏ.சங்கரன் -
NEWS From -kalvicholai

ஞாயிறு, ஜனவரி 08, 2012

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வரும் மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க கடந்த 2ம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி வீசிய புயலால் மாவட்டமே முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக ஸ்தம்பித்தது.அதனையொட்டி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தனித் தேர்வர்கள் உரிய காலத்தில் பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அரசு தேர்வுத்துறை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனித் தேர்வர்கள் வரும் 12ம் தேதி வரை பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.எனவே, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தேர்வர்கள் அந்தந்த பகுதி மாவட்ட கல்வி அலுவலகம் அல்லது கடலூரில் இயங்கி வரும் அரசு தேர்வுத் துணை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதை இணைத்து வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் பெற்ற அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.dinamalar
Dinamalar
டேட்டா வின்ட்(Data Wind)கனடா நிறுவனம் இந்திய அரசுடன் இணைந்து "ஆகாஷ்" என்ற சிறிய கைக்கணினி ஒன்றை மாணவர்களுக்காக ரூ.2,500 விலையில் வழங்க உள்ளது. இதனை மாணவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் "ஆகாஷ்" ஐப் போன்று சற்று மேம்பட்ட "உபிஸ்லாட்7" என்ற சிறிய கைக்கணினி ரூ.2,999 விலையில் வழங்கப் பட உள்ளது.இதனைப் பெற http://www.aakashtablet.com/ என்ற இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
Configuration of "உபிஸ்லாட்7"......
android 2.3 os,
cortex a8 -700mz processor ,
256 RAM, 2GB Memory ,
800*480- 7inch resolution screen ,
and touch screen , GPRS ,Wi-Fi, USB port are available.
Blogger Widgets
Back to TOP Testf