flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

தினமலர் சார்பில் டி.இ.டி., வழிகாட்டி கருத்தரங்கு; மதுரையில் நாளை நடக்கிறது



மதுரை:மதுரையில் நாளை (ஏப்.,7), தினமலர் சார்பில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) வழிகாட்டி கருத்தரங்கு நடக்கிறது.பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சரியாக மதியம் 2 முதல் மாலை 4 மணி வரை ஆசிரியர் பயிற்சி(டி.டி.எட்.,) படித்தவர்களுக்கும், மாலை 4.30 முதல் 6.30 வரை பி.எட்., படித்தவர்களுக்கும் கருத்தரங்கு நடக்கிறது.கணிதம், சூழ்நிலையியல், அறிவியல், சமூக அறிவியல், தமிழ், ஆங்கிலம், குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் ஆகிய பாடங்கள் தொடர்பாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.


மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம், ஆசிரியர்கள் ராஜ்மோகன், வெங்கடாஜலபதி, பிரகாஷ் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.மத்திய அரசு இலவச கட்டாயக் கல்வி திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் படி, பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணி புரிய டி.இ.டி.,எனப்படும் தகுதித் தேர்வில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உரிய தகுதிகளுடன் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக 2010 ஆக., 23 மற்றும் அதற்கு பின் சேர்ந்தவர்கள் இத்தேர்வை கட்டாயம் எழுதி வெற்றி பெற வேண்டும். 

தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெறுவது அவசியம் என்பதால், மாணவர்களைப் போலவே, ஆசிரியர்களும் படிக்க வேண்டி உள்ளது. முதன் முறையாக நடைபெறும் இத்தேர்வு, ஆசிரியர் பணிகளில் சேரப்போகும் லட்கணக்கானவர்களில் மனதில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தேர்வு ஜூன் 3ம் தேதி நடைபெறுகிறது. கடுமையான போட்டியை உள்ளடக்கியுள்ள இத்தேர்வில் வெற்றி பெற உதவியாக, தேர்வை எளிதாக எதிர்கொள்ள வழிகாட்ட, "தினமலர்' நாளிதழ் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment about this post...

Blogger Widgets
Back to TOP Testf