ஞாயிறு, ஜூன் 17, 2012
புதன், ஜூன் 13, 2012
இன்று (13-06-2012) மாலை தமிழகம் முழுவதும் அந்தந்த வட்டார தலைநகரங்களில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெறும் ஆர்ப்பாட்டம் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடை பெற்றது.
கீழ்வேளூர் வட்டார ஆர்ப்பாட்ட நிகழ்வுகள்..
மேலும்..... பார்க்க.....
வெள்ளி, ஜூன் 08, 2012
தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது கவுன்சிலிங் வரும் ஜூலை 13ம் தேதி துவங்குகிறது.
ஆண்டுதோறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் இந்தாண்டு ஜூலை 9ம் தேதி துவங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கவுன்சிலிங் தொடர்பான அனைத்து தேதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றியமைக்கப்பட்ட தேதி விவரம்:
ஆண்டுதோறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் இந்தாண்டு ஜூலை 9ம் தேதி துவங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கவுன்சிலிங் தொடர்பான அனைத்து தேதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றியமைக்கப்பட்ட தேதி விவரம்:
Direct Recruitment of Assistant Elementary Educational Officer 2010 - 11

To query your Result, enter your Roll No.( 11AE 01000000)
(for all the candidates who have written the examination)
ஞாயிறு, மே 06, 2012
அரசு பள்ளிகளில், குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் எண்ணிக்கை, அதிகளவில் இருப்பதால், அவர்களை மாறுதல் செய்த பிறகே, ஆசிரியர் பொது மாறுதல், "கவுன்சிலிங்' நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே தான், விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இடமாறுதல் "கவுன்சிலிங்'
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் சுமார் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுகின்றனர்.இதில் இடைநிலை உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களிடமிருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வு தற்காலிக சீனியாரிட்டி பட்டியலில் 1,227 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஞாயிறு, ஏப்ரல் 29, 2012
ஆசிரியர்கள் பொதுமாறுதல் தொடர்பாக விண்ணப்பிக்கலாம் என்று நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை, நேற்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்திலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல் வழங்க கவுன்சலிங் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
அதில், “அனைத்து அரசு மற்றும் நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் விருப்பம் உள்ளவர்கள் பொது மாறுதல் கவுன்சலிங்கில் பங்கேற்கலாம். அதற்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் 28ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
அவற்றை தொகுத்து 30ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருவோர் விண்ணப்பங்கள் மே 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நேற்று மாலை அவசரம் அவசரமாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில் ????? மறு உத்தரவு வரும் வரை யாரும் மாறுதல் விண்ணப்பங்கள் பெறக்கூடாது ????? என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும், கவுன்சலிங் இல்லாமல் மறைமுகமாக மாறுதல் வழங்கப் போகிறார்களோ என்று சந்தேகம் அடைந்துள்ளனர்.
சனி, ஏப்ரல் 28, 2012
இனி குழந்தைகள் டி.வி. பார்க்கலாம்!!! தப்பில்லை
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் கேபிள் டிவி வழியாக புதிய அரசு கல்வி ஒளிபரப்புச் சேவையை துவங்க உள்ளது. இந்த தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு கல்வியை அளிக்கும் நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆர்வமுள்ள ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தினந்தோறும் 1 முதல் 12ம் வகுப்பு பாடத்திட்டங்களில் இருந்து பாடப்பகுதிகள் திறமை வாய்ந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட உள்ளது.
இதற்கான கல்வி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பணியில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில் ஆர்வமும், ஆனுபவமும் உள்ள ஆசிரியர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும், அவர்களுக்கு இன்னும் சம்பள வழங்கப்பட வில்லை. அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், உடற்கல்வி, ஓவியம், கைத்தொழில் மற்றும் கணினி படிப்பு முடித்தவர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மார்ச் முழுவதும் பணியாற்றியும், முதல்மாத சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏப்ரல் மாதமும் முடிய உள்ளது.
முதன்மைகல்வி அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: சிறப்பாசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., மூலம் நிதி ஒதுக்கி, அந்தந்த கிராம கல்வி குழுவில் உள்ள தலைவர் மற்றும் தலைமையாசிரியர் கையெழுத்திட்டு, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். மார்ச் மாதத்தில் இடையிலும், கடைசியிலும் சிலர் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் குறித்து கணக்கிடப்படுகிறது. ஒரு மாதத்தில் 12 நாள்கள் பணியாற்றி இருந்தால், முழு சம்பளம் வழங்கப்படும். குறைவான நாட்கள் எனில், அதற்கேற்ப சம்பளம் வழங்கப்படும். சில பள்ளிகளில் இருந்து ஆசிரியர் பட்டியல், பணியாற்றிய நாட்கள் விபரம் வரவில்லை. வந்தபின், ஒருசில நாட்களில் சம்பளம் வழங்கப்படும், என்றார்.
"கல்வி இணை செயல்பாடுகளில், பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை, இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு' முறை குறித்த பயிற்சி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம், மண்டபம் ஒன்றியங்களில் நடந்த பயிற்சியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி ஆய்வு செய்து பேசியதாவது:
வரும் கல்வி ஆண்டிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரு பருவமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒரு பருவமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு பருவமும் நடத்தப்படுகிறது. ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகம் மட்டுமே.இந்தியாவில் முதன் முதலாக தமிழகத்தில் தான் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களின் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது. மாணவர்கள் எதில் திறமையாக இருக்கின்றனரோ அதில் ஈடுபடுத்துவது. இதன் மூலம் கல்வியைத் தவிர, மற்ற இணைச் செயல்களான வாழ்க்கை கல்வி, தையல், ஓவியம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணியில், 16 ஆயிரத்து 450 பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். ஆசிரியர்களும் இதில் பங்கேற்க வேண்டும். முப்பருவ கல்வி முறையில், 40 மதிப்பெண்கள் வளரறி மதிப்பீடாகவும் (செயல்பாடுகளை வைத்து), 60 மதிப்பெண்கள் தொகுத்தறி மதிப்பீடாகவும் (தேர்வு முறையில்) வழங்கப்படும். செயல்வழி கற்றல் முறை (அட்டை முறை) இதனால், மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு, ஒன்பதாம் வகுப்பு, அதற்கு அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பில், இந்த முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படும். இவ்வாறு பழனிச்சாமி கூறினார்
ராமநாதபுரம், மண்டபம் ஒன்றியங்களில் நடந்த பயிற்சியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி ஆய்வு செய்து பேசியதாவது:
வரும் கல்வி ஆண்டிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரு பருவமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒரு பருவமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு பருவமும் நடத்தப்படுகிறது. ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகம் மட்டுமே.இந்தியாவில் முதன் முதலாக தமிழகத்தில் தான் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களின் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது. மாணவர்கள் எதில் திறமையாக இருக்கின்றனரோ அதில் ஈடுபடுத்துவது. இதன் மூலம் கல்வியைத் தவிர, மற்ற இணைச் செயல்களான வாழ்க்கை கல்வி, தையல், ஓவியம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணியில், 16 ஆயிரத்து 450 பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். ஆசிரியர்களும் இதில் பங்கேற்க வேண்டும். முப்பருவ கல்வி முறையில், 40 மதிப்பெண்கள் வளரறி மதிப்பீடாகவும் (செயல்பாடுகளை வைத்து), 60 மதிப்பெண்கள் தொகுத்தறி மதிப்பீடாகவும் (தேர்வு முறையில்) வழங்கப்படும். செயல்வழி கற்றல் முறை (அட்டை முறை) இதனால், மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு, ஒன்பதாம் வகுப்பு, அதற்கு அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பில், இந்த முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படும். இவ்வாறு பழனிச்சாமி கூறினார்
"தமிழாசிரியர்" என்பதை, இனி, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)" என ஆசிரியர்கள் குறிப்பிட வேண்டும் என்று, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு வந்துள்ள உத்தரவு: "பள்ளி உதவி ஆசிரியர்" என்பது, இனிமேல், பட்டதாரி ஆசிரியர் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இனிமேல் தமிழாசிரியர் என எழுதாமல், அதற்கு பதிலாக, பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) எனவும், அதேபோல் பிற ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்), பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) என, பாட வாரியாகக் குறிப்பிட வேண்டும்.
பெயர் மாற்றம் செய்யப்பட்டதையே, வருகை பதிவேடு, ஆவணங்கள் உட்பட அனைத்திலும் குறிப்பிட வேண்டும். தமிழக தமிழாசிரியர் கழக கோரிக்கைப்படி, இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, ஏப்ரல் 27, 2012
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 27.04.2012.
2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தற்போது மேற்படி பணிகளை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை நிறுத்தி வைக்கும்ப்படும்படி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வியாழன், ஏப்ரல் 26, 2012
திருத்தி அச்சடிக்கப்பட்ட, புதிய பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள், இன்று முதல் மாநிலம் முழுவதும் விற்பனைக்கு வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான புத்தகங்கள், ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பின், பள்ளி நிர்வாகங்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், தனியார் பள்ளிகளுக்கான விற்பனை, இன்று முதல் நடைபெறும் எனவும், பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
தி.மு.க., ஆட்சியில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டு, முதலில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு, திட்டம் அமல்படுத்தப்பட்டது. மீதியுள்ள வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்டது. பாடப் புத்தகங்களில், கருணாநிதியைப் பற்றியும், தி.மு.க.,வைப் பற்றியும் பல கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததாலும், போதிய அளவிற்கு தரம் இல்லை என்பதாலும், இந்த கருத்துக்கள் நீக்கப்பட்டபின், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் இனி வேலையை இழப்பர்: அமைச்சர்
பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீதான பிடியை இறுக்க, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இந்தப் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள், டிஸ்மிஸ் செய்யப்படுவர் என துறை அமைச்சர் சிவபதி, ஏற்கனவே அறிவித்துள்ளார்.
தற்போது கூடுதலாக சம்பந்தபட்ட ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்யலாம் எனவும், கல்வித்துறை பரிந்துரை செய்ய உள்ளது. மாணவியரிடம் பாலியல் ரீதியாக பிரச்னைகள் தரும் ஆசிரியர்களால், கல்வித் துறைக்கும், தமிழக அரசுக்கும் அவ்வப்போது தர்மசங்கடமான நிலை உருவாகிறது.
செவ்வாய், ஏப்ரல் 24, 2012
பதவி உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள இதர ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தனி ஊதியம் வழங்கப் படாது என, தெரிவிக்கப் பட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதம், 2009ல் திருத்தி அமைக்கப் பட்டது. இடை நிலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு, மாதம் 500 ரூபாய் சிறப்புப் படி வழங்கப் பட்டது. இதற்கு மாற்றாக, 750 ரூபாய் தனி ஊதியம் அளிக்க, 2011 ஜனவரி முதல் தேதியில் இருந்து அனுமதிக்கப் பட்டது.
யார் தகுதியானவர்? :
ஞாயிறு, ஏப்ரல் 22, 2012
ஒன்று , இரண்டு மற்றும் மூன்று , நான்கு மற்றும் ஐந்து வகுப்புகளுக்கன் மதிப்பெண் பட்டியல் படிவம் மற்றும் மாணவர் வருகைக்கான படிவம் ஆகியவை பெற்றிட Please Click Below the Link
சனி, ஏப்ரல் 21, 2012
Pay Commission Complaint
தமிழ்நாடு அரசின் ஊதியக் குறை தீர்க்கும் குழுவிடம் தங்கள் குறைகளைப் பதிவு செய்து கொள்ள 3.5.2012 கடைசி நாள் .
தங்களுக்கு ஏற்பட்ட ஊதியக்குழுவின் முரண்பாடுகளை நேரடியாகவோ அல்லது சங்கத்தின் மூலமாகவோ தெரிவிக்கலாம் . அதற்கான பதிவினை dspgrc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் 04-05-2012 க்கு முன் பதிவு செய்யவும்.
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், தங்களுக்கான பயனர் அடையாளம் மற்றும் கடவுச் சொல்லைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி ஆணையர் மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைப்பு நிதி சந்தா செலுத்த, மின்னணு செலுத்துச் சீட்டு மற்றும் மாதாந்திர படிவம் எனும் திட்டம், கடந்த ஒன்றாம் தேதி கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, மாதாந்திர வைப்பு நிதி சந்தா செலுத்திய உடனே, அந்தந்த தொழிலாளர்களின் வைப்பு நிதி கணக்குகள், தானாகவே புதுப்பிக்கப்பட்டு விடும். நிர்வாகத்தினர், இணையதளத்தில், சம்பந்தப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்த பின்னரே, வைப்பு நிதி சந்தா செலுத்த முடியும். விவரங்களை கொடுத்தபின், இணையதளம் மூலம், செலுத்துச் சீட்டு பெற்றுக் கொண்டு, வங்கிகளில் வைப்பு நிதி சந்தா செலுத்தலாம். வேறு எவ்வித படிவமும் செலுத்த வேண்டியதில்லை.
இப்புதிய நடைமுறைப்படி, அனைத்து நிர்வாகத்தினரும், தங்களுக்கான பயனர் அடையாளம் (user id) மற்றும் கடவுச்சொல் (password) பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, www.epfindia.com அல்லது ro.tambaram@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம், அல்லது, 044-22265332 என்ற தொலைபேசி மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, ஏப்ரல் 20, 2012
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 19.04.2012.
2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கபடுகின்றன.
*30.04.2012 க்குள் ஆசிரியர்கள் தங்களது மாறுதல் விண்ணப்பங்கள் உரிய வழியில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
*05.05.2012 அன்று அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடமிருந்து விண்ணபங்களை பெற்று 07.05.2012 க்குள் சரிப்பார்த்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஏ, பி மற்றும் சி பதிவேடுகள் தயார் செய்ய வேண்டும்.
*10.05.2012 அன்று மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணபங்களை பரிசீலித்து சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
*மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொண்டு 2012 - 2013 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் மாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்த பணியினை முடித்து தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
*மாறுதல் சார்பான அரசாணை பெறப்பட்ட உடன் விரிவான அறிவுரைகள் வழங்கப்படுமென அறிவிக்கப்படுகிறது.
செவ்வாய், ஏப்ரல் 17, 2012
கோடை விடுமுறைக்குப்பின்,
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், ஜூன் 1ம் தேதி திறக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் தற்போது நடந்து வருகின்றன. இதர வகுப்புகளுக்கான தேர்வுகள், இம்மாதம் இறுதிக்குள் முடிகின்றன. மே மாதம் கோடை விடுமுறை. இதற்குப்பின், ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளி திறப்பு தேதி குறித்த அறிவிப்பை, வகுப்புகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும், 2012-13ம் கல்வியாண்டில், 200 நாட்கள் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெற வேண்டும் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பள்ளி திறக்கும்போது, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கவும், துறை ஏற்பாடு செய்துள்ளது.
தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான புத்தகங்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கும், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான புத்தகங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும், மே மூன்றாவது வாரத்தில் இருந்து அனுப்பப்பட உள்ளன. கடைசி வாரத்தில், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களும், வாகனங்களை வைத்து, தங்கள் பள்ளிக்கு தேவையான பாடப் புத்தகங்களை, சம்பந்தபட்ட கல்வி அலுவலகங்களுக்குச் சென்று கொண்டு வர வேண்டும். இதற்கான போக்குவரத்து செலவை, பாடநூல் கழகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் அதே தேதியில், தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது
திங்கள், ஏப்ரல் 16, 2012
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் மதிப்புமிகு தேவராஜன் அவர்களை சந்தித்து 2012-2013ம் கல்வியாண்டு முப்பருவமுறைக்கான பயிற்சிகளை கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு வழங்குவதை தவிர்க்கும் படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
முப்பருவக் கல்விமுறை அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுவதால், ஆசிரியர்களை தயார்படுத்தி பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மே மாதத்தில் பயிற்சிகள் அளிக்கப்படவிருககிறது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளளது.
திங்கள், ஏப்ரல் 09, 2012
ஞாயிறு, ஏப்ரல் 08, 2012
மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் சலுகை எதுவரை?
பிளஸ் 2 தேர்வு முடிந்து விட்டதால், இலவச பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை, பஸ்களில் ஏற்றாமல், கண்டக்டர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக புகார்கள் வந்துள்ளன. சென்னையில், இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள், பஸ் கண்டக்டருடன் வாக்குவாதம் ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டன.
இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது,
அவர் கூறியதாவது: இலவச பஸ் பாஸ், ஓராண்டு காலத்துக்கு வழங்கப்படுகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் மாணவர்கள், இலவசமாக பஸ்களில் பயணம் செய்யலாம்.
விடுமுறை நாட்களில், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்திற்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.
இந்த ஆண்டுக்கான பயண அட்டையில், ஏப்., 30ம் தேதி வரை பயணச் சலுகையை மாணவர்கள் அனுபவிக்கலாம். அதை மீறி, கண்டக்டர்கள் தகராறு செய்வதாக உரிய புகார்கள் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜூன் மாத இறுதியில் டி.இ.டி., தேர்வு தள்ளி வைப்பு? :
படிப்பதற்கு ஆசிரியர்களுக்கு அவகாசம்
ஆசிரியர் தகுதித் தேர்வை, ஜூன் முதல் வாரத்தில் இருந்து, கடைசி வாரத்திற்கு தள்ளி வைப்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தேர்வுக்கு தயாராக, தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் அளிப்பதற்காக, இம்முடிவை டி.ஆர்.பி., எடுக்க உள்ளது.
வெள்ளி, ஏப்ரல் 06, 2012
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்களில் EMP code பூர்த்திசெய்வதில் குழப்பம் நீடித்தது . அதற்கு முற்றுப்புள்ளி வைக்க TRB District wise EMP code list ஐ வெளியிட்டுள்ளது. உங்கள் பார்வைக்கு
தினமலர் சார்பில் டி.இ.டி., வழிகாட்டி கருத்தரங்கு; மதுரையில் நாளை நடக்கிறது
மதுரை:மதுரையில் நாளை (ஏப்.,7), தினமலர் சார்பில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) வழிகாட்டி கருத்தரங்கு நடக்கிறது.பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சரியாக மதியம் 2 முதல் மாலை 4 மணி வரை ஆசிரியர் பயிற்சி(டி.டி.எட்.,) படித்தவர்களுக்கும், மாலை 4.30 முதல் 6.30 வரை பி.எட்., படித்தவர்களுக்கும் கருத்தரங்கு நடக்கிறது.கணிதம், சூழ்நிலையியல், அறிவியல், சமூக அறிவியல், தமிழ், ஆங்கிலம், குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் ஆகிய பாடங்கள் தொடர்பாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.
கணிதம் பயில உதவும் கருவி;46 லட்சம் வாங்க அரசு ஏற்பாடு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல், 10 வகுப்பு பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, கணிதம் பயில உதவும், "ஜியோமெட்ரி பாக்ஸ்களை' இலவசமாக வழங்க, "டெண்டர்' விடப்பட்டுள்ளது.ஆரம்பக் கல்விப் படிப்பைத் தாண்டியதும், கணித வகுப்பில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கொண்ட பெட்டிக்கு, "ஜியோமெட்ரி பாக்ஸ்' என்ற பெயர் உள்ளது.
புதன், ஏப்ரல் 04, 2012
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தயார் கடந்த ஆண்டு விலையில் கிடைக்கும்
வரும் கல்வி ஆண்டிற்கான சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், முன் கூட்டியே பிரிண்டிங் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின், 22 மாவட்ட வட்டார அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, பாடப்புத்தகங்களுக்கான கட்டணம், கடந்த ஆண்டு அளவிலே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரம்
முதல் இரண்டு வகுப்புகளுக்கு 200 ரூபாய்,
மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை 250 ரூபாய்,
ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு 300 ரூபாய்,
ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு 350 ரூபாய்
என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பெற்றுக்கொள்ளும் போது, 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
தனிப்பிரதிகள் சில்லரை விற்பனையில்,
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, பிரதி ஒன்றின் விலை 60 ரூபாய்க்கும்,
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 65 ரூபாய்க்கும்,
ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரை, 75 ரூபாய்க்கும்
விற்பனை செய்யப்பட உள்ளது.
25 சதவீத மானியத்துடன் பள்ளிகள் துவங்க தனியாருக்கு அழைப்பு
இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், மேல்நிலைப் பள்ளிகளை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. அரசு - தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தில், பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் (பின்னடைவு) காலியிடங்களுக்கு பரிந்துரை மற்றும் பதிவு மூப்பு விவரங்கள் அரசு இணையதளத்தில் அறியலாம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், தலைவர் அவர்களிடமிருந்து 314 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 48 சிறுபான்மையின பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிட அறிவிக்கை பெறப்பட்டது.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு மத்திய அரசிடம் புகார்.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் அப்துல்மஜீத் கூறியதாவது:
தமிழகத்தில் 37000 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் சுமார் 83 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி
காலத்துக்கு பிறகு ஓய்வு ஊதியம் பெறுவது உள்ளிட்ட நலன்களுக்காக மேற்கண்ட
ஆசிரியர்கள் பி.எப் செலுத்தி வந்தனர். இது
மாதம் ஒன்றுக்கு ரூ 210 கோடி இருக்கும். அதே போல வரி பிடித்தம் உள்ள தொகை
மாதம் ஒன்றுக்கு ரூ500 கோடி செலுத்தி வந்தனர். கடந்த 36 ஆண்டுகளாக
மேற்கண்ட ஆசிரியர்கள் செலுத்திய தொகையில் நிர்வாகத்தில் உள்ள சிலர் கையாடல்
செய்துள்ளனர்.
இதன்படி திருவெறும்பூர் வட்டத்தில் ஆசிரியர்களின் பணம் ரூ74 லட்சம், தருமபுரியில்
ரூ73 லட்சம் , கம்மாவரம் ரூ40 லட்சம், நாகபட்டினத்தில் ரூ1 கோடியே 22
லட்சம் என கையாடல் செய்துள்ளனர். இந்த கையாடல் குறித்து தமிழக அரசிடம்
கடந்த 19 ஆண்டுகளாக ஆசிரியர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால்
இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. பலகட்டமாக போராட்டங்கள் நடத்தியும் பலன்
இல்லை. இந்த கையாடல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்தும்
நடவடிக்கை இல்லை.
இதையடுத்து தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
சார்பில் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு கடந்த வாரம் டெல்லி சென்றது.
அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் , மத்திய மனித வள
மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், இணை அமைச்சர் புரந்தேஸ்வரி ஆகியோரை
சந்தித்து மனு கொடுத்தோம். இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அப்துல் மஜீத் தெரிவித்தார்.
திங்கள், ஏப்ரல் 02, 2012
வட்டார வளமைய செலவுத் தொகை விவரம்
2011-2012 ம் கல்வியாண்டில் நாகப்பட்டினம் வட்டார வளமையத்திற்கு வழங்கப்பட்டுள்ள செலவுத் தொகை விவரம்
2011-2012 ம் கல்வியாண்டில் IED மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடத்துவதற்கு பள்ளிக்கு ரூ 5,000 வழங்கப் பட்டுள்ளது.
B.Ed 2012-2013
மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம் பி.எட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் 29.03.2012 முதல் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வழங்க கடைசி நாள் :30.04.2012. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் :30.04.2012
நுழைவுத் தேர்வு நாள் : 25.05.2012
Kftup : : www.msuniv.ac.in.- njhiyNgrp vz;- 9487999625
சனி, மார்ச் 31, 2012
இடைநிலை
ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை
மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
"ஒரே
ஒரு தேர்வு தான்:தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு
செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில்
அறிவித்தார்.
வெள்ளி, மார்ச் 30, 2012
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல் 12ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப்பு செய்துள்ளது.
ஆசிரியர்
பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், நாளை மார்ச் 31ம் தேதி
வெளியிடப்படும், என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா
தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வை, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண். 008118 / டி 2 / 2012 நாள். 21.2.2012
2011
- 12 ஆம் ஆண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ்
நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட தொடக்கப்பள்ளிக்கு புதிய தொடக்கப்பள்ளி
தலைமையாசிரியர் பணியிடம் தோற்றுவித்து அதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு நாளை (31-03-2012) நடத்தப்பட உள்ளது .
ஏற்கெனவே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து இடைநிலை ஆசியராக நிலையிறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தவிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து இடைநிலை ஆசியராக நிலையிறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தவிடப்பட்டுள்ளது.
மேலும் அப்பள்ளியில் பணியில் இளையோராக உள்ளவருக்கு பணியிட மாறுதல் வழங்கவும் உத்தேசிக்கப் பட்டுள்ளது.
நாள். 31.03.2012
இடம் : அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்.
செவ்வாய், மார்ச் 27, 2012
தமிழக பட்ஜெட் 2012-2013
சட்டப்பேரவையில்
நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், 2012 - 13 ஆம் நிதியாண்டுக்கான தமிழக
அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து தனது உரையை தொடங்கினார்.
தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
* 2011-12 நிதியாண்டில் தமிழகஅரசின் சொந்த வரி வருவாய் ரூ 59,932 கோடி
* வணிக வரி வருவாய் ரூ.46,678 கோடி
* வரி இல்லாத இனங்களின் மூலம் வருவாய் ரூ.6,032 கோடி
சனி, மார்ச் 24, 2012
பள்ளிக் கல்வித் துறையில், 397 இளநிலை உதவியாளர்களை நியமனம் செய்வதற்கான
கவுன்சிலிங், 29ம் தேதி சென்னையில் நடக்கிறது. டி.என்.பி.எஸ்.சி.,
தொகுப்பூதிய பணியாளர்களுக்கு என, சிறப்பு போட்டித் தேர்வை (குரூப்-4)
நடத்தியது. இதன்மூலம், பள்ளிக் கல்வித் துறைக்கு, 397 இளநிலை உதவியாளர்கள்
பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., அளித்துள்ளது. இவர்களுக்கு, பணி நியமனம்
வழங்குவதற்கான கவுன்சிலிங், சென்னை, அசோக்நகரில் உள்ள, அரசு மகளிர்
மேல்நிலைப் பள்ளியில், 29ம் தேதி காலை, 10 மணிக்கு நடைபெறுகிறது.இதில்
கலந்து கொள்பவர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யிடம் இருந்து பெற்ற அறிவிப்புக்
கடிதம் மற்றும் தேர்வுக்கான "ஹால் டிக்கெட்' ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்
என, பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.