flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

பதவி உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள இதர ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தனி ஊதியம் வழங்கப் படாது என, தெரிவிக்கப் பட்டு உள்ளது.


தமிழக அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதம், 2009ல் திருத்தி அமைக்கப் பட்டது. இடை நிலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு, மாதம் 500 ரூபாய் சிறப்புப் படி வழங்கப் பட்டது. இதற்கு மாற்றாக, 750 ரூபாய் தனி ஊதியம் அளிக்க, 2011 ஜனவரி முதல் தேதியில் இருந்து அனுமதிக்கப் பட்டது.

யார் தகுதியானவர்? :


இந்த தனி ஊதியம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில் நிதித்துறை முதன்மைச் செயலர் சண்முகம் அளித்துள்ள விளக்கம்: சாதாரண நிலையில், 2011 ஜனவரி முதல் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 750 ரூபாய் தனி ஊதியம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாசிரியர்கள், 2011 ஜனவரிக்கு பின், தேர்வு நிலை அடையும் போதும், தர ஊதியத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அவர்கள் பெற்று வரும் அடிப்படை சம்பளத்தில், மூன்று சதவீதத்துக்கு சமமான ஒரு ஊதிய உயர்வு மட்டுமே அளிக்கப்படுவதால், அவர்கள் இத்தனி ஊதியத்தை தொடர்ந்து பெறலாம். இந்த ஆசிரியர்களுக்கான தனி ஊதியம், ஆண்டு ஊதிய உயர்வுக்கும், அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்துக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஆசிரியர்களுக்கு, 2010 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி, 500 ரூபாய்; 2006 ஜனவரிக்கு முன், தேர்வு நிலை, சிறப்பு நிலை எய்திய பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்ற பின், உயர்பதவியில் சிறப்புப் படி தொடர்ந்து பெற தகுதியற்றவர்கள். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

1 கருத்து:

Comment about this post...

Blogger Widgets
Back to TOP Testf