flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

பிளஸ் 2 பாடத் திட்டங்களை மாற்ற தமிழக அரசு திட்டம்:அறிமுகமாகி 8 ஆண்டுகள் ஆனதால் நடவடிக்கை

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால், புதிய பாடத் திட்டங்களை தயாரிப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.2004ல் அறிமுகம்: பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2004ல், பிளஸ் 1 வகுப்புகளுக்கும், 2005ல், பிளஸ் 2 வகுப்புகளுக்கும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


இப்பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 2006ல் இருந்து பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. வரும் மார்ச்சில், ஏழாவது ஆண்டு தேர்வு நடக்கிறது.
பாடத் திட்டங்கள் அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய பாடத் திட்டங்களை உருவாக்குவது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ""மேல்நிலை வகுப்புகளுக்கு, புதிய பாடத் திட்டங்கள் கொண்டு வருவது தொடர்பாக, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.சிந்திக்கும் திறனுக்கு முக்கியத்துவம்: புதிய பாடத் திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றின், வரலாறு, புவியியல் ஆசிரியர் கூறியதாவது:ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, பாடத் திட்டங்களை முறையாக மாற்றுவது தான் சரியாக இருக்கும்.

ஆனாலும், வகுப்பு வரியாக புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கும்போது, மேல்நிலை வகுப்புகளுக்கு வரும்போது, காலதாமதம் ஏற்பட்டு விடுகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளில், அறிவியல், கம்ப்யூட்டர் தொழில் துறைகளில், பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, இதற்கேற்ப புதிய பாடத் திட்டங்கள் உருவாக்குவது அவசியம்.தற்போதைய பாடத் திட்டங்களில், மாணவர்களின் சிந்திக்கும் திறனை வெளிப்படுத்துவதற்கான பகுதிகள், மிகவும் குறைவாகவே உள்ளன. எனவே, இப்பகுதிகள் அதிகம் இடம் பெறும் வகையில், புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment about this post...

Blogger Widgets
Back to TOP Testf