flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

வியாழன், பிப்ரவரி 23, 2012

அனைவருக்கும் இடை நிலைக்கல்வி இயக்கம் சார்பில், சுற்றுலா செல்லும் அரசு உயர், மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


அனைவருக்கும் இடை நிலைக்கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கிறது. வட மாநில சுற்றுலாவுக்கு, ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது. மாநில மற்றும் மாவட்ட சுற்றுலாவிற்கு, தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. சுற்றுலாவில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு, கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றுலா குழுவிலும், ஆண்கள், பெண்கள் இருபாலரிலும் குழுத்தலைவர் தேர்வு, போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, உடைகளில் அதிக கவனம் செலுத்துவதோடு, குழு தலைவருக்கு அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உடமைகள் அனைத்திலும் "லக்கேஜ் டாக்' இணைக்க வேண்டும். வடமாநிலம் செல்லும் சுற்றுலா ஆசிரியர்கள் "ஆர்.எம்.எஸ்.ஏ., தமிழ்நாடு' என்ற தொப்பி , ஸ்வெட்டர் உட்பட தேவையான பொருட்களை எடுத்து செல்ல வேண்டும். பயணத்தின் முடிவில் டூர் டைரி சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பயணத்தின் போது திரைப்படம், பாடல்களை தவிர்க்க, அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் திட்ட இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment about this post...

Blogger Widgets
Back to TOP Testf