flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

புதுடில்லி: : தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை, ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கலாகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பட்ஜெட் அமையும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வருமானவரி உச்சவரம்பினை 2 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாயின. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என கூறப்பட்டது.


இந்நிலையில் தற்போது தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு தற்போது, ரூ.1.8 லட்சமாக உள்ளது. இதை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பார்லிமென்டரி நிலைக்குழு பரிந்துரை செய்தது. மேலும் நேரடிவரிவிதிப்பில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்படலாம் எனவும், அத்துடன் 10 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு மட்டுமே, 30 சதவீத வருமான வரி விதிக்கலாம் என்றும் கூறியது. தற்போது 8 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு, 30 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது.
.2.5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதமும், 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு 30 சதவீதமும் வரி விதிக்க வேண்டும். பணவீக்கம் அதிகரித்துள்ளதைத் தவிர்க்க, இதைச் செய்ய வேண்டும்' என, பரிந்துரை செய்யவிருக்கி்றது..


இவற்றை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அதனால், வருமான வரி விலக்கு வரம்பு, அதிகரிப்பு மற்றும் வருமான வரி வீதங்களில் மாற்றம் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது பற்றி பாராளுமன்ற நிலைக்குழு இன்று விரிவான ஆலோசனை நடத்துகிறது.
Blogger Widgets
Back to TOP Testf